அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது
திருப்பூர், டிச. 22-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் ,அவைத்தலைவர்கள் எம்.சண்முகம், வெ.பழனிசாமி அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வனத்துரை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:&
மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார்கள். அம்மா அவர்கள் தேர்தலை எப்படி நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளார்கள். இந்த தேர்தலை நீங்கள் அமைதியாக நடத்தி தர கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். அம்மா அவர்கள் அறிவுரைப்படி இதுவரை நல்ல முறையில் செயல்படுகிறோம். கடந்த வாரத்தில் தி.மு.க., அமைப்பு தேர்தலில் பல்வேறு தகராறுகள் நடந்ததை அறிவோம். ராணுவ கட்டுப்பாட்டுடன் நமது கழகத்தை நடத்தி வரும் அம்மா அவர்கள் மிக அமைதியான இயக்கமாக நடத்தி வருகிறார்கள்.
அந்தந்த பகுதிகளில் கழக நிர்வாகிகள்ஆஅலோசனை நடத்தி, அரவணைத்து செல்ல வேண்டும்; நல்ல அரவணைத்து செல்லும் பொறுப்பாளர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க அம்மா அஅவர்கள் சில விதிமுறைகளை அறிவித்து உள்ளார்கள்.
அ.தி.மு.க., இடைவெளியின்றி தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டுமே கழக தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் தகுதி பெற்றவர்கள். கழக உறுப்பினராக இருக்கும் கால கட்டத்தில் கழக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதியற்றவர்கள்.
இந்த தேர்தலை சிறப்பாக நடத்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பொறுப்பாளர்கள் வர உள்ளனர். அவர்களுடன் இணைந்து, இந்த தேர்தலை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:&
பல்லடம் சட்டமன்ற தொகுதியை மாநகர் மாவட்ட கழகத்தில் இணைந்து செயல்பட அனுமது வழங்கிய அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொளவ்து; வருகிற அமைப்பு தேர்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பது. திருப்பூர் மாநகர், மாவட்ட வளர்ச்சிக்காக நிதியை வாரி வழங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது. 2016 தேர்தலில் கருணாநிதியை முழுமையாக மக்கள் புறக்கணிக்கும் வண்ணம் சிறப்பாக செயலாற்றுவது, அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி திருப்பூரில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் தொடர் பிரார்த்தணைகள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தொகுதி செயலாளர் ஜே.ஆர்.ஜான், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மருத்துவரணி செயலாளர் சீனியம்மாள், வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணி, வீரபாண்டி சோமு, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், மீனவரணி செயலாளர் தங்கமுத்து, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், நல்லூர் நகர செயலாளர் டெக்ஸ்வெல் முத்து, வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,அவினாசி சுப்பிரமணி, ஜெகதாம்பாள், அன்னூர் சவுகத் அலி,பட்டுலிஙம், பூலுவபட்டி பாலு, நத்தக்காட்டு மணி, சேவூர் வேலுசாமி, சில்வர் வெங்கடாச்சலம், எச்.ஆர்.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி., தியாகராஜன், கருணாகரன், கண்ணபிரான், தம்பி மனோகரன், பல்லடம் சித்ரா தேவி, ஏ.எஸ்.கண்ணன், சடையப்பன், கவுன்சிலர்கள் வசந்தாமணி, கேபிள் சிவா, சுபா மோகன், ஆனந்தன், லட்சுமி, வேலுசாமி, பிரியா சக்திவேல், சத்யா, கல்பனா, பேபி தர்மலிங்கம், ஜெயந்தி, சண்முகசுந்தரம், கே.பி.சண்முகம், வேலுசாமி,செல்வம் சின்னசாமி, கனகராஜ், சபரி, கணேஷ், பாலன், சேகர், ஈஸ்வரன், சின்னசாமி, செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், அமுதா, முருகசாமி, உமா மகேஷ்வரி, கனகரராஜ், கலா, செல்வி, சுஜாதா சின்னசாமி, யு.எஸ்.பழனிசாமி, சரளை ரத்தினசாமி,அன்னூர் காளியப்பன், பூண்டி விஸ்வநாதன், ராஜேஷ்கண்ணா, நீதிராஜன், பரமராஜன், ரத்தினகுமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், மூர்த்தி, செல்வம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், வே.சரவணன், பாஸ் என்கிற பாஸ்கரன், அசோக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்