Oct 13, 2014

திருப்பூரில் ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,.25 வது வார்டு கிளைக்கழகம் சார்பில் .மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி  மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழிகாட்டுதலின் பேரில் கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில்,மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் பி.என்.ரோட்டில் உள்ள ராமையா காலனி ஆறுகொம்பை வீதியில் உள்ள ஸ்ரீ வீர பத்திரகாளியம்மன் கோவில் சாமிக்கு 1000 லிட்டர் பால் அபிஷோகம், 1008 எலுமிச்சை கனி மாலை அணிவித்தும்,புடவைசத்தியும், பூமாலை அணிவித்தும் உச்சிகால பூஜையும்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்கள், கொட்டுரவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன்.ஆகியோர் வேண்டுதலின்போது மனம் உருகியபடி  கண்ணீர் விட்டு ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்க பிரார்தனை செய்தனர்.இதனை பார்த்த மற்ற நிர்வாகிகளும் கதறி அழுதது. அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.