Jul 10, 2017

Trichy New superindent Police for Trichy rural


திருச்சி அஇஅதிமுக (அம்மா) எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் மாநில செயலாளர் சிவபதி தலைமையில்

அதிமுக (அம்மா) எம்.ஜி.ஆர்
இளைஞரணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முன்னிட்டு அகில இந்திய கபடி போட்டி திருச்சி சிவானி கல்லூரியில் கடந்த 4 நாட்களாக நடந்தது. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹரியனா அணியும், பெண்கள் பிரிவில் ஹிமாசல பிரதேச அணியும் வெற்றிப் பெற்றன. இந்த அணிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோப்பை வழங்கினார்.

இப்போட்டியில் 29 மாநிலங்களிலிருந்து பெண்கள் பிரிவில் 21 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் கலந்து கொண்டனர். இன்று நடந்த இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஹிமாச்சல பிரதேச அணி ஹரியானாவை 33-12 என்ற கணக்கில் வென்றது. அதுப்போல ஆண்கள் பிரிவில் ஹரியனா அணி பஞ்சாப் அணியை 20 - 14 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணிக்கு ரொக்க பரிசாக 3 இலட்சம் 2 இலட்சம் 1 இலட்சம் மற்றும் கோப்பையும் வழங்கினர்.

போட்டியின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றானது கபடி இந்த விளையாட்டு தெற்காசிய அளவில் அதிகமாக விளையாடப்படுகிறது. 2004-ம் ஆண்டு முதல் நடந்து வரும் கபடி உலகப் கோப்பை போட்டியில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் வென்றதில்லை. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி நடத்த 1 கோடி ரூபாய் ஒதுக்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றார்.

இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் சிவபதி தலைமை வகித்தனர். மேலும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, காமராஜ், விஜயபாஸ்கர் துரைக்கண்ணு,M.P.க்கள் ரெத்தினவேல், விஜிலா MLA க்கள் முருகுமாறன், செல்வராஜ், சந்திரசேகர், பரமேஸ்வரி மற்றும் சிவானி கல்வி குழும தலைவர் செல்வராஜ் என பலர் கலந்து கொண்டனர்.