திருச்சி விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களின் கண்காட்சி
திருச்சியில் கதர்ஆடையை பிரபலப்படுத்தும்வகையில் விசைத்தறி கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார், ஏராளமானோர் வாங்கிச்சென்றனர்.
கதர் ஆடைகளை அனைவரும் வாங்கி அணியவேண்டும் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கவேண்டும் என்று அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திவருகிறது, இதனடிப்படையில் திருச்சியில் மத்திய அரசு ஜவுளித்துறை சார்பில் விசைத்தறி ஜவுளி விற்போர் வாங்குவோர் சந்திப்பு மற்றும் விசைத்தறி ஆடைகள் கண்காட்சி இன்று தொடங்கியது.
இதனை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி பங்கேற்று தொடங்கிவைத்து, கதர்ஆடைகளின் பல்வேறு ரகங்களை பார்வையிட்டார். இதில் 15அரங்குகள் அமைக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாராகும் கதர்ஆடை நெசவாளர்களின்; ஆயத்த ஆடை மற்றும் பல்வேறு ரகத்தினாலான உடைகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயனுறும்வகையில் உற்பத்தி விலைக்கே நேரடி விற்பனை செய்யப்படுவதால், இன்று தொடங்கி 3நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் ஏராமான பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான ஆடை ரகங்களை தேர்வுசெய்துவருகின்றனர்.