Nov 22, 2014

திருப்பூர் கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாமில்

வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாமை துவக்கி வைத்து  மாணவி ஒருவருக்கு கண் கண்ணாடியை வழங்கினர். அருகில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.என். விஜயகுமார் மற்றும் பலர் உள்ளனர்.

திருப்பூரில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்த முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம்

மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் உலக தரம் வாய்ந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறியுள்ளளார்.

திருப்பூர் வடக்கு கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதார மேம்பாட்டு பணிகளை மேம்படுத்தும் வகையில், தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரகுபதி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன் முன்னிலை உரையாற்றினார்.மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம் வாழ்த்தி பேசினார்.முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாமினை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு மருத்துவ கருவிகளை வழங்கியும் பேசியதாவது:-
தமிழக அரசின் சார்பில், தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 13 வட்டாரங்களில், வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் மொத்தம் 39 மருத்துவ முகாம்கள் ஊரக பகுதிகளில் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  
தமிழக அரசு அம்மா  அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெறுகிறது,மக்கள் நோய் நொடியின்றி சுகாதாரமாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவ துறைக்காக பல கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கி இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் மதிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. கிராமப்புறத்தில் மருத்துவர்களே வந்து முகாமிட்டு கிராம பெண்கள் மற்றும் மக்கள்  சிகிச்சை அளிக்கும் முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 30 க்கும் மேல் நடைபெற்று வருகிறது. 
இது போன்ற சிறப்பான திட்டங்களை மக்கள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் உலக தரத்தில் சென்னையில் ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை அவர் உருவாக்கி தந்துள்ளார்.
நீங்கள் சுகாதாரமாக வாழ வேண்டும், என்பதற்காக தான் ஜெயலலிதா வழிகாட்டுதல்படியான திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. 
எனவே மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்றும் நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  பேசினார்.
இந்த முகாமில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, சத்துணவு மற்றும் உடல் நலம் பேண கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கண்காட்சியை மருத்துவ துறையினர் அமைத்து  இருந்தனர். முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள், பெண்கள் மருத்துவம், இருதய நோய் பரிசோதனை, எலும்பு மூட்டு,, பல், சர்க்கரை நோய் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில்  214   மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கண் கண்ணாடிகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார்
மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது மருத்துவம்,    குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவம், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம், இருதய நோய் சிகிச்கை, காது மூக்கு சிறப்பு சிகிச்சை, எலும்பு சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவம், பல்,மற்றும் சர்க்கரை நோய் மருத்துவம், கண், தோல் நோய் சிறப்பு மருத்துவம், சித்த மருத்துவம், ஆகிய மருத்துவ சேவைகள் செய்யப்படுகின்றன.  மேலும், நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்இருபாலருக்கும் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இரத்த  அழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை  நுஊபு பரிசோதனை, கண் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.என். விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் எஸ்.எம்.பழனிசாமி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம்,  இணைஇயக்குநர்  கேசவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்னுலிங்கம் (காளிபாளையம்), ஸ்ரீதேவி பழனிசாமி (வள்ளிபுரம்), செல்வகுமார் (ஈட்டிவீரம்பாளையம்), மூர்த்தி (பொங்குபாளையம்), லட்சுமி (கணக்கம்பாளையம்), மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், ஒன்றியகுழு உறுப்பினர்கள் கிருத்திகா ரத்தினசாமி, சித்ரா பெரியசாமி, சித்ரா சௌந்தராஜன், மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் எம்.மணி, புத்தரச்சல் பாபு, ராஜேஷ்கண்ணா,  கோகுல், கவுன்சிலர் சண்முக சுந்தரம் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.45 கோடிக்கு நடைபெறும் சாலை மற்றும் குடிநீர் வளர்ச்சி பணிகளுக்கும், முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை தொட்டதற்கும் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் ஆணையாளர் எம்.அசோகன், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்தில் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், பூலுவபட்டி பாலு, வசந்தமணி,அன்பகம் திருப்பதி, பிரியா சக்திவேல் உள்ளிட்ட நிலைக்குழு தலைவர்கள், மாநகர பொறியாளர் ரவி மற்றும் உதவி பொறியாளர்கள், சபியுல்லா, வாசுகுமார், கண்ணன் உள்ளிட்ட உதவி ஆணையாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக மேயர் அ.விசாலாட்சி கொண்டு வந்த சிறப்பு கவனதீர்மானத்தை கொண்டு வந்து அவர் பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.அது 142 அடியை எட்டியுள்ளது.இதன் மூலம் அணை குறித்த அத்தனை கேடு மதியாளர்களின் புளுகு மூட்டைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் எந்த விதமான அணுகு முறையைக் கடை பிடித்தல், அதன் மூலம் தமிலனாத்டிர்க்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும், நன்மை ஏற்படும் என்பதாஹிப் புரிந்து, முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தமிழ்நாட்டு மக்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்த வடகிழக்குப் பருவமழையினும் விஞ்சிய கருணை மழைமக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இம்மன்றம் நன்றியோடு, போற்றி புகழ்ந்து வணங்கி அவர் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என இம்மன்றம் இறைவனிடம் வணங்கி மகிழ்கிறது.இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தில் மாநகராட்சிக்கு உள்பட்ட தென்னம்பாளையம், ஊத்துக்குளி சாலை, 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 
மூன்று இடங்களில் குடியிருப்பு மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உட்பட 216 தீர்மானங்கள் மன்ற உறுபினர்களின்ஒப்புதலுக்கு முன்வைக்கப்பட்டன.முறையாக ஆய்வு மேற்கொள்ளாததால், மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்மானங்களை ஒத்திவைக்க வேண்டுமென மண்டல தலைவர்கள் வலியுறுத்தி பேசினார்.நகரில் உள்ள டியூப்லைட்டுகளை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்றுவது, ரோடு வசதி, மழைநீர் வடிகால் வசதி, புதிய போர்வெல் அமைப்பது, அம்மா உணவகம், புதிய உபகரணங்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் மீது மன்ற உறுப்பினர்கள் பேசினார்.
12வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் (இ.கம்யூனிஸ்ட்) ஜெயலலிதா படத்தை மன்ற தில் மற்ற கூடாது என பேசியதற்கு மேயர் விசாலாட்சி பதிலளித்து பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.அது 142 அடியை எட்டியுள்ளது.இதன் மூலம் அணை குறித்த அத்தனை கேடு மதியலர்களின் புளுகு மூட்டைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் எந்த விதமான அணுகு முறையைக் கடை பிடித்தல், அதன் மூலம் தமிலனாத்டிர்க்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும், நன்மை ஏற்படும் என்பதாஹிப் புரிந்து, முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தமிழ்நாட்டு மக்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்த வடகிழக்குப் பருவமழையினும் விஞ்சிய கருணை மழைமக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இம்மன்றம் நன்றியோடு, போற்றி புகழ்ந்து வணங்கி அவர் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும். 
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
தேசத் தந்தை காந்தியடிகள் ஒரு கவுன்சிலராக இல்லாத நிலையில் ஒரு அரசு அதிகாரிகள் கிறிஸ்துவராக இருந்தால் ஏசு, மாதா படங்களையும், இஸ்லாமியர்களாக இருந்தால் மெக்கா படத்தையும், இந்துக்களாக இருந்தால் விநாயகர், முருகன் உள்ளிட்ட அவரகளின் இஷ்ட  தெய்வங்களின் படங்களைஅவர் இந்திய தேசதின் விடுதலைக்காக அமைதியுடனும், அறப்போரட்டங்கள் நடத்தியும் சுதந்திரம் பெற்று தந்தார்.அவருடைய படத்தை இந்திய அரசாங்கம் ரூபாய் நோட்டில் அச்சடித்துள்ளன ஒரு வியாபார நிறுவன உரிமையாளராக இருந்தாலும்,அதிகாரியானாலும், ாதாரண தொழிலாளியாக  இருந்தாலும் அவரவர்களின் வீடுகளில், அலுவலகத்தில் அவரவர்கள் வழிபாடும் தெய்வங்களின் படங்களை வைத்திருப்பார்கள். மாமன்றத்தில் அசுர பலத்துடன் உள்ள நாங்கள் (அண்ணா தி.மு.க) இந்திய தேசத்தின் தந்தை காந்தியடிகள் என்றால், தமிழக மக்களின் தாயாக இருந்து காத்துவரும் எங்களின் இஷ்ட தெய்வமான ஜெயலலிதா படத்தை வைத்துள்ளோம் என்று பதிலளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
முருகசாமி, செல்வம், ரங்கசாமி, வசந்தாமணி, செல்வி (அண்ணா தி.மு.க.):- 
கடந்த 6 மாதத்திற்கு முன்பே 2வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அமைச்சர், மேயர் ஆகியார் கூறியும், இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. குடிப்பதற்கு ஏதுவாக இல்லாத 3வது குடிநீர் திட்டத்தின் வாயிலாக விநியோகம் செய்யப்படும் தண்ணீரை குடிப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுதாக மக்கள் நினைக்கிறார்கள். 2வது குடிநீர் திட்ட தண்ணீரை வழங்குவதில் ஏதாவது இடையூறு உள்ளதா என்பதை தெரியப்படுத்த வேண்டும்.2வது குடிநீர் திட்ட தண்ணீர் தெற்கு பகுதிக்கு விநியோகம் செய்து 2 மாதத்திற்கு மேல் ஆகிறது. எனவே, குடித்தநீரை முறையாக விநியோகிக்க மேயர், ஆணையாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
மாரப்பன் (மா.கம்யூ.,):- எனது வார்டு பகுதியில் கடந்த மாதத்தில் பெய்த மழையால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மழைநீர் தேங்கி நிற்கிறது. வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தெருவிளக்குகள் எரிவதில்லை. அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதங்கள் நடந்தது.கூட்டத்தின் முடிவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.45  கோடி வளர்ச்சி பணிகளுக்கு மன்றம் ஒப்புதல் வழங்கியது.