அதிமுக தொடங்கப்பட்டு 42-ஆவது ஆண்டுகள் நிறைவடைந்து, 43-ஆவது ஆண்டு தொடங்குவதை ஒட்டி, அதற்கான நிகழ்ச்சி வரும் 17-ஆம் தேதி சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னையில் கட்சித் தலைமை அலுவலகத்திலுள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் மாலை அணிவித்து, கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தொடக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிட உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்வர் என்று அதிமுக தலைமை அலுவலகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.