திருப்பூர்,மார்ச்.8-
அண்ணா தி,மு,க,வை எதிர்க்கும் சக்தி இனி எவருக்குமில்லை என சவால் விடும் வகையில் திருப்பூரில் பாசறை பேரணி அமைந்துள்ளது என அமைச்சர் எம்.எம்.எம்.ஆனந்தன் கூறினார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறையின் எழுச்சிப் பேரணி புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகில் இருந்து சுமார்.7ஆயிரம் பேர்களுடன் துவங்கியது.பேரணியை மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்து கலந்து கொண்டார். பேரணி முக்கிய வழியாக மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.
பேரணி முடிவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
அண்ணா தி.மு.க.விற்கு புத்துயிர் ஊட்டும் வகையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த இளைஞர் பாசறை,இளம்பெண்கள் பாசறை தோற்றுவித்துள்ளார்.இன்று இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இன்று நடந்த பேரணி திருப்பூர் மாநகர் மாவட்டம் என்றும் ஜெயலலிதாவின் எக்கு கோட்டை என்பதை நிருபிக்கும் வகையிலும், இனி ஜெயலிதாவை எதிர்க்கும் சக்தி எவருக்குமில்லை என சவால் விடும் வகையில் பறைசாற்றியுள்ளது. எந்த ஒரு நிகழ்ச்சியனாலும் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்ட கழகத்தை விட அதிக அளவில் முக்கியம் தந்து திருப்பூர் மாநகர் மாவட்டம் தான் முதலிடம் வகிக்கும் வகையில் சிறப்பு சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
அண்ணா தி.மு.க.இயக்கத்தில்தான் சாதாரண தொண்டன் கூட உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க தலைவர்கள், எம்.பி.,எம்.எல்.ஏ., அமைச்சர் ஆக முடியும் இன்று பேரணியில் கலந்து கொண்ட நீங்கள் நாளை மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன் உயர்ந்த பதவிக்கு வரலாம். அண்ணா தி.மு.க.வில் மட்டுமே உழைப்பவர்களுக்கு நிச்சயம் பதவி கிடைக்கும். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர் பாசறையினர் கடுமையாக பணி செய்ததின் பயனாக 39 தொகுதிக்கு 37 தொகுதி பெற்று இருகிறோம் அதேபோல் வருகின்ற 2016ம் ஆண்டு நடை பெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் 234 தொகுதியிலும் அண்ணா தி.மு.க.வெற்றிக்கு இந்த பேரணியே ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தனது வாழ்த்துரையில், எள் போட்டால் எண்ணையாகும் வகையில் மிக பிரமாண்டமான எழுச்சி பேரணி நடந்துள்ளது. கழகத்திற்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அமைந்துள்ள பேரணி அண்ணா தி.மு.க. இயக்கத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பின்னால் நம்மையெல்லாம் தன் இமைபோல் கட்டி காத்து வரும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதையாகி தமிழகத்தின் நிரந்தர முதல்வராக பொறுப்பேற்று நமையும், இந்த் நாட்டையும் வழி நடத்துவார் என பேசினார்.
மேலும் பல்லடம் எம்.எல்.ஏ.,பரமசிவம், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், ஆகியோர் வாழ்த்தி பேசினார்.மாவட்ட பாசறை செயலாளர் ஏ.எம்.சதீஷ் வரவேற்று பேசினார்.துணை மேயர் சு.குணசேகரன் பேரணியின் உறுதிமொழியை வாசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சார்பு அணி மாவட்ட, நகர,ஒன்றிய நிர்வாகிகள் வடக்கு தெற்கு, தொகுதி நிர்வாகிகளால்.பல்லடம், பொங்கலூர் ஒன்றிய செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றியகுழு தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற, தலைவர்கள், கவுன்சிலர்கள் மாமனர் உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இயக்குனர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.