திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வைஃபை இன்டர்நெட் சேவை இன்று துவக்கி வைத்தார்.
இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்திற்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின் கீழ் இந்த வைஃபை சேவைக்கான கட்டமைப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இந்திய விமான நிலைய ஆணையக்குழுமத்திற்கு முற்றிலும் இலவசமாக அளித்துள்ளது இந்த ஒப்பந்தத்தின் படி ஏற்கனவே தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை விமான நிலையங்களில் இத்தகைய வைஃபை சேவை தொடயங்கப்பட்டுள்ளது. இத்தகைய சேவையை க்வாட்ஜென் வயர்லெஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
இந்த கூடங்களில் நுழைந்த நுழைந்த உடனேயே வைஃபை சேவையை பயன்படத்த தொடங்கலாம் இந்த சேவைக்கான கட்டணம் முதல் 15 நிமிடங்கள் இலவசம் இலவச உபயோகத்திற்கு பின்னர் ஆன்லைன் மூலம் ரூபாய் 30. 50. 90. அல்லது ஒரு நாளைக்கு முழுமையாக இலவச மாக பெற ரூபாய் 150 செலுத்தி பெறலாம்.
இந்த வைஃபை சேவை துவக்கத்தின் மூலம் டிஜிட்;டல் இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சி சர்வதேச விமான நிலையம் மற்ற சர்தேச விமான நிலையங்களுக்கு இணையாக உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளுக்கு உயர்தர இ;ண்டர்நெட் சேவையை அளி;க்க தொடங்கியுள்ளது.