Sep 18, 2016

திருச்சி 18.09.2016 தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுக்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 240 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருச்சி 18.09.2016 

தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களின் உத்தரவுக்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 240 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாசுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  மற்றும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி  ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா உத்தரவுக்கிணங்க திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவானைக்கோவில் .கே.திருமண மஹாலில் சமூக நலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் 240 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வெகு விமரிசையாக  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் ஆகியோர் இன்று (18.09.2016) தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி  அவர்கள்ää நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல்ää  திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் குமார்ää  மாநகராட்சி மேயர் ஜெயாää மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரிமுருகன்ää மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜாத்திää மாநகராட்சி துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
மாவட்ட அளவில் சமுதாய வளைகாப்பு விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர்  விழா பேருரையில் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர்  பெண்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்காக கருவுற்ற தாய்மார்களுக்கு 16 வகையான அம்மா குழந்தைநல பரிசுப் பெட்டகம் வழங்கியுள்ளார்கள். மகப்பேறு காலத்தில் 3 தவணையாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. கருவுற்ற பெண்களுக்கு குழந்தைகள் வளர்ச்சி அடைவதற்காக ஊட்டச்சத்துக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப்பணியில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு காலவிடுப்பு 9 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில்  இம்மாவட்டத்தில் உள்ள 12227 அங்கன்வாடி மையங்களில் கர்ப்பணி பெண்களுக்கு இணைஉணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கர்ப்பணி பெண்களுக்கு பாதுகாப்பான தாய்மை கர்ப்ப கால பராமரிப்பு பாலூட்டும் தாய்க்கான பராமரிப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு தாய்ப்பால் மற்றும் கூடுதல் உணவு குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்ப்பகாலத்தில் தேவையான மருத்துவ உதவிகள் கர்ப்பகால பரிசோதனைகள் தடுப்ப10சிகள்ää இரும்பு சத்து மாத்திரைகள் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறுநல உதவி திட்ட தொகை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிறந்த பேறுகால  சிகிச்சை அளிக்க ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டம் அம்மா பெட்டகம் மருத்துவமனையில் பேறுகாலம் முடிந்து வீட்டிற்கு செல்ல இலவச வாகன வசதி குழந்தை பிறந்து முதல் ஆறுமாதம் வரை பாலூட்டும் தாய்க்கு தேவையான சத்தான உணவு கிடைக்கும் வகையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களால் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசினார்.
மாவட்ட அளவில் சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிப்பெண்களுக்கு மாலையும் வளையலும் அணிவித்து  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் விழா சிறப்புரையில் பேசியதாவது:
       தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி தாய் அன்போடும்ää மனித நேயத்தோடும் சமுதாய வளைகாப்பு விழா திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். கருவிலே திருவைத் தாங்கிää தங்களது அடுத்த தலைமுறையை உருவாக்கித் தர இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களை சுற்றமும்ää நட்பும் சூழ வாழ்த்தி மகிழும் வளைகாப்புத் திருவிழா தங்களுக்கும் நடக்க வேண்டும் என்பது எல்லா கர்ப்பிணிப் பெண்களின் எதிர்பார்ப்பு ஆகும்ஆனால் இத்தகு விழாவை நடத்துவதற்கு ஏற்ற பொருளாதார வசதியற்ற ஏழை கர்ப்பிணிப் பெண்களின் உள்ளார்ந்த விருப்பத்தை உணர்ந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் கப்பிணிப் பெண்களுக்காக இத்திட்டத்தை கொண்டு வந்தார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பக் காலத்தில் போதுமான ஊட்டச் சத்துää சுகாதாரம் மற்றும் மன நலத்தைப் பேணிப் பாதுகாக்க நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி 7 மாதங்கள் அல்லது 9 மாதங்கள் நிறைவடைந்த கர்ப்பிணிப் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டு 5 வகையான கலவை சாதம் தயாரித்து வழங்கப்படுகிறது. மேலும்ää திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம்ää அம்மா குழந்தைகள் நலப்பரிசு பெட்டகம்ää மகப்பேறு சஞ்சீவி திட்டம்ää பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை என எண்ணற்ற பல திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் தலைமையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது அறிவு பூர்வமாக குழந்தை வளர்வதற்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது. தாய் சேய் நலம் காண நிதியுதவி அளிக்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெண்களுக்காக அதிகமான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையுரையில் பேசியது:
       மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ பரிசோதனைää கர்ப்ப காலங்களில் மகப்பேறு நிதியுதவிää மாண்புமிகு முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத்திட்டம் என பல்வேறு மருத்துவம் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவ சிகிச்சை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 100 சதவீதம் மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவ சிகிச்சை பார்க்கபட்டு வருகிறது. குழந்தைப்பிறந்து 3 முதல் 4 மாதங்கள் வரை முறையாக தடுப்பூசி போட வேண்டும்
       தமிழக அரசு வட்டார அளவில் தொகுதிக்கு ஒரு நிகழ்ச்சி வீதம் சமுh வளைகாப்பு நடத்த கடந்த 2013-ம் ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 2013-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 54 இடங்களில் 5000க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு 16 வட்டாரங்களில் 1 நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 56 இடங்களில் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ரூ.5 இலட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 7ää500க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுh வளைகாப்பு விழா நடத்தப்பட்டது.
       அதன்படி இந்த ஆண்டு 16 வட்டாரங்களில் 1 நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 108 இடங்களில் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ரூ.10 இலட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4320-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட உள்ளது.
       கர்ப்பிணிப் பெண்களுக்கு 7வது மற்றும் 9-வது மாத காலத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்றைய தினம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சர்க்கரைப்பொங்கல் தேங்காய் சாதம் புளி சாதம் எலுமிச்சை சாதம் மற்றும் தயிர்சாதம் உள்ளிட்ட ஐந்து வகையான உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களுக்கும்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அமைச்சர் அவர்கள் மாலையும் வளையிலும் அணிவித்தார்கள்சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்  மாநகராட்சி மேயர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மஞ்சள் குங்குமம் ஒரு டஜன் வளையல் ப்ளவுஸ் தாம்புல தட்டுடன் சீதனப்பொருட்களை வழங்கினார்கள்.
       ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு 4-வது மாதத்தில் இருந்து சத்துமாவு தொடர்ந்து மருத்துப் பரிசோதனை தடுப்பூசி மற்றும் ஊட்டசத்துடன் உடல்நலக் கல்வியும் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களின் உடல் எடையை எடுத்து அதற்கேற்றவாறு மருத்துவ ஆலோசனையும் பிரசவகால பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணித் தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை போன்ற விவரங்கள் அடங்கிய கையேடும் வழங்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

       இந்நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் மண்டலக்குழு தலைவர் லதா மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராமு மணிகண்டம் ஒன்றியக்குழு தலைவர் முத்துகருப்பன் மாவட்ட ஆவின் பால் வளத்தலைவர் திரு.எஸ்.எம்.ராஜேந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் சகாதேவபாண்டியன் விஜி ராஜா பெஸ்ட் பாபு செல்வராஜ் சங்கர் மகாலட்சுமி ஒன்றியக் குழு உறுப்பினர் கண்ணதாசன்ää ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியின் மாவட்ட திட்ட அலுவலர் புவனேஸ்வரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்  ஸ்ரீரங்கம் வட்டாட்சியர்கள் சண்முகராஜன் ராஜசேகரன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.