திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்றிய விபரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம், பல்லடம், உடுமலைப்பேட்டை ரோட்டில் உள்ளது ஜல்லிபட்டி ஊராட்சி சின்னப்புத்தூர் கிராமம். இந்த ஊரின் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் பல்லடம், திருப்பூர், உடுமலைபேட்டை மற்றும் கோவை ஆகிய ஊர்களுக்கு செல்ல பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள சின்னப்புத்தூர் பிரிவு பஸ் நிறுத்ததிற்கு வந்து அங்கிருந்து பஸ் பயணம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த பேருந்து நிறுத்தத்தில் அந்த வழியாக செல்லும் டவுன் பஸ்கள் கூட நிறுத்தப்படாமல் செல்வதாக கூறபடுகிறது. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர், கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தினால் சின்னப்புத்தூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவ,மாணவிகள்,கிராம மக்கள் சாலை மறியலி ல் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
உடுமலைபேட்டையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளவதற்காக திருப்பூரில் வனத்துறை அமைச்சர் ஆனந்தன் அந்த வழியாக சென்றார். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் சாலையில் அமர்ந்து இருப்பதை பார்த்து உடனடியாக காரி லிருந்து இறங்கிய பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.காரிலிருந்து இறங்கிய அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளை சம்பத்தபட்ட அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலம் தெரிவித்து தீர்வு காணவேண்டும் என்றும், சாலை மறியல் செய்து போக்குவரத்தை தடை செய்ய கூடாது என அறிவுறித்திநார்.
மேலும் அதே இடத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அவரது செல்போன் மூலம் பேசி சின்னப்புத்தூர் பிரிவில் நகர பேருந்துகள் நின்று செல்ல உடனடி நடவடிக்கை எடுத்தார்.அதனை அதனை தொடர்ந்து அந்தவழியாக வந்த அரசு பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களிடம் எக்காரணம் கொண்டும் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் செல்லக்கூடாது என்றும், குறிப்பாக பள்ளி மாணவ,மாணவியர்களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என அறிவுரை கூறினார்.