Showing posts with label ஊராட்சி. Show all posts
Showing posts with label ஊராட்சி. Show all posts

Oct 8, 2014

குண்டடம் பகுதி செய்திகள்


திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா விடுதலயாக வேண்டி ஒன்றிய செயலளார் செந்தில்குமார் தலைமையில் 200 பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கோவை,மதுரை ரோட்டில் கோஷங்கள் எழுப்பி அறவழியில் போராட்டம் நடத்தினர்  நிகழ்ச்சியில் ஒன்றியி  செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் பக்த்வாச்சலம்,  நிலவள வங்கி தலைவர் சிவபாலகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் தமிழரசு,பேரவை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம் பகுதி செய்திகள்





திருப்பூர் புறநகர் மாவட்டம் அண்ணா தி.மு.க.மகளிர் சார்பில் அதன் மாவட்ட செயலளார் சித்ராதேவி தலைமையில் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொய் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பலளிடம் எம்.எல்.ஏ. பரமசிவம் முன்னிலையில் பால்குடம் எடுத்து வேண்டுதல் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர்  சண்முகம், நகராட்சி துணை தலைவர் வைஸ் பழனிசாமி, ம்மாவ்த்ட கவுன்சிலர் ப.நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி,எஸ்.எஸ்.மணியன், நிர்வாகிகள் சூ.தர்மராஜன்,பாரதி செல்வராஜ்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மடத்துகுளம் பகுதி செய்திகள்



மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்பேற்கவும் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமையில்,ஒன்றிய செயலாளர் நா.அண்ணாத்துரை, திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், அமராவதி பாசன சபைத் தலைவர் ராஜ்குமார், பேரூராட்சித் துணைத் தலைவர் தண்டபாணி, ஆகியோர் முன்னிலையில் கழுகரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,பேரவை செயலாளர் சிவலிங்கம், வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் யேசுதுரை, நீலம்பூர் செல்வராஜ், கழுகரை பாபு, கவுன்சிலர்கள் பாலு, குணா,தண்டபாணி, சுப்பிரமணி, கணியூர் காஜா மைதீன், தேவி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடுமலை செய்திகள்








Oct 5, 2014

60 க்கும் மேற்பட்ட அண்ணா தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரதம் இருந்தனர்.



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 4வது மண்டலம் 56வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி மாமன்ற உறுப்பினர் அன்பகம் திருப்பதி தலைமையில், மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி முன்னிலையில் 60 க்கும் மேற்பட்ட அண்ணா தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரதம் இருந்தனர்.

திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 25வது வார்டு



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 25வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில், குமரன் மகளிர் கல்லூரி தலைவர் வசந்தி, நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர்  ஆகியோர் ராமூர்த்தி, கிளை செயலாளர்கள் வெங்கடேஷ்,பூபதி, ரவிச்சந்திரன் முன்னிலையில் என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 23வது வார்டு



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 23வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ஹரிஹரசுதன், பழனிசாமி, தவசிமுத்து ஆகியோர் முன்னிலையில் என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 3வது மண்டலம் 32வது வார்டு மக்கள்



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 3வது மண்டலம் 32வது வார்டு மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம்  தலைமையில், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மூகாம்பிகை ஏ.எஸ்.தங்கவேலு, முன்னால் கவுன்சிலர் உமாதேவி,கிளை துணை செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் மண்ணரை பஸ் நிறுத்தம் அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.



திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 21வது வார்டு சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி மாமன்ற உறுப்பினர் அமுதா வேலுமணி தலைமையில், மண்ணரை ஊராட்சி கழக செயலாளர் வேலுமணி, கிளை செயலாளர் பழனிசாமி ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலையில் கே.எஸ்.தியேட்டர் எதிரில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 

உண்ணாவிரத போராட்டம்

 
 
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்துமீண்டு வர வேண்டி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன்,ஊராட்சி கழக செயலாளர் வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் ஊராட்சி பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  

அண்ணா தி.மு.க.வழக்கறிஞர் சங்கம் உண்ணாவிரதம்




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,வழக்கறிஞர் பிரிவு சார்பில் கோர்ட் வீதியில் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், தலைவர் ஏ.ஆர்.வெளியங்கிரி ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.5 1/4 லட்சமாக உயர்த்தி கொடுத்து திருப்பூர் மாவட்டத்திற்கு முதல்வராக இருந்த காலத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும், கூடுதல் சார்பு நீதிமான்றம் ஏற்படுத்தி கொடுத்தும், மாவட்ட நீதிபதியை நியமனம் செய்த மக்கள் முதலவர் ஜெயலலிதா  வழக்குகளில் இருந்து  மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும் அமைதியான முறையில் அறவழியிலும், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்படஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில்  மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தங்கமுத்து, ராஜேஷ்கண்ணா, பூலுவபட்டி எம்.பாலு,ஹரிஹரசுதன், பட்டுலிங்கம் .ரத்தினகுமார், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், கே.பி.சண்முகம், சிவா, நீதிராஜன் ஆகியோர்களும்,
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ரூபன், சத்தியநாராயணன், சதீஷ்,முருகேஷ்,வேலுசாமி, பரிமளா, தங்கவேல்,மணிகண்டன்,யோகேஷ், ஷிலாதேவி, சித்ரா, கண்ணன்,சையத் இப்ராகிம், திவ்யா, ஜோதிமணி,நடராஜ், உதயகுமார், ராமமூர்த்தி,பூபதி, தங்கமணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் உண்ணாவிரதம்





திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமைதியான முறையில் அறவழியிலும், அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி எம்.பாலு தலைமையில் 
உண்ணாவிரதம் இருந்தனர், இந்த நிகழ்ச்சிகளில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் அண்ணா தி.மு.க.வினர்களை தொடர்ந்து ஏற்றுமதியாளர்களும் வேலை நிறுத்தம்








திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு.குணசேகரன் தலைமையிலும்,,வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி எம்.பாலு தலைமையிலும், தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு அருகில் 4வது மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமையிலும், திருப்பூர் மாநகராட்சி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் கடை  அடைப்பு நடத்தி காமராஜ் ரோட்டில் சங்கத்தலைவர் தலைமையிலும் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமைதியான முறையில் அறவழியிலும், கோவில், மசூதி, சர்ச் ஆகிய வழிப்பட்டு தலங்களில் பிராத்தனை செய்தும் 45 பேர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும் அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்ட திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது நீதிக்கும், தர்மத்திற்கும் வழங்கப்பட்ட தண்டனையாகும்.நீதிபதி என்பவர் சுய விருப்பு, வெறுப்பு இல்லாமல் தீர்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் இந்த தீர்ப்பை பொருத்தவரையில் தனிப்பட்ட முறையில் வேண்டும் என்றே ஜெயலலிதாவை பழிவாங்க வேண்டும் என்று மனித செயலற்ற வெறித்தனமான தீர்ப்பு ஆகும். இது வரை நடந்த வழக்குகளில் எந்த நீதிபதியும் இது போன்ற அநீதியான நீதியை கொடுத்தது இல்லை.இந்த செயலை அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி கூறினார்.
 துணை மேயர் சு.குணசேகரன் பேசும்போது, மக்களால் நான், மக்களுக்காக நான் என வாழ்ந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஒரு துறவியைபோல் வாழ்ந்து வந்தார்.அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது என்பது பெரும் பாக்கியமாக கொள்ள வேண்டும். இன்று அவரை கர்னாடகா கோர்ட் தவறான தீர்ப்பினை வழங்கியுள்ளது.அவர்களை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டர்கள்.அவர் வெளியே வரும்போது எதிர் கட்சியினருக்கு தக்க பாடம் புகட்டுவார்.என அவர் பேசினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம்,ஸ்டீபன்ராஜ், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிகுமார், எஸ்பி.என்.பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, கலைமகள் கோபால்சாமி எம்.சி., டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சி.எஸ்.கண்ணபிரான், அ.கண்ணப்பன், வடக்கு ஒன்றிய செயலளார் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், வி.பட்டுலிங்கம் .ரஞ்சித்ரத்தினம், அசோக்குமார், ராஜ்குமார்,  ரத்தினகுமார், ஈஸ்வரமூர்த்தி,காலனி செல்வராஜ், பாசறை ஏ.எம்.சதீஷ், யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், அன்பரசன்,ஆகியோர்களும் 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி, திருப்பூர் கிளை நிர்வாகிகள் ராஜேந்திரன்,சரவணன், ரவிகுமார்,முருகன், குணசேகரன், கணேஷ், சிவகுமார், சி.டி.சி.பழனிசாமி ஆகியோர்களும் 
அஹமது பைசல்,சாகுல்அமீது, தாமோதரன், காதர்பேட்டை ஜின்னாபாய்,அப்பாஸ், ராபிதீன், கே.எம்.பி.சாகுல்ஹமீது, ஷேக்தாவூத், முஹமதுயூனுஸ்,இஸ்மாயில், கவுன்சிலர்கள்  முருகசாமி, செல்வம், பாலசுப்பிரமணியன், கணேஷ்,பாலன், கனகராஜ், விஜயகுமார், சபரீஷ்வரன், சின்னசாமி, ஈஸ்வரன், ஆகியோர்களும், நல்லூர் லோகநாதன், சுரேந்தர், மணிகண்டன்,நீதிராஜன், மகளிர் அணியை சேர்ந்த கோமதி, அன்னபூரணி, சுந்தரம்பாள், இந்திராணி, மும்தாஜ், பேபி பழனிசாமி, சம்சாத், ரிஸ்வானா,ரஹ்மத்நிசா, கதிஜாபானு, சாராபானு மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொங்கு ராஜாமணி, ராஜசேகர், அஜீம்பாஷா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். 
மேலும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் அனுப்பியுள்ள செய்தியில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் தொழில் மேம்பாடு, தொழிலாளர்கள் நலன் இவற்றுடன் திருப்பூர் நகர வளர்ச்சியிலும் தனி கவனம் செலுத்தி வரும் அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக ஆதரவு செரிவித்து இன்று அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் அதன் தொடர்புடைய சங்கங்கள் சார்பாக ஒருநாள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி, திருப்பூரில், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 1-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.இதை தொடர்ந்து இன்று அனைத்து பின்னலாடை தொழில் துறை சங்கங்கள் இணைந்து முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பின்னலாடை துறையினர் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குருச்சிக்கோட்டையில் அ .இ .அ .தி .மு .கவினர் .உண்ணாவிரதப்போராட்டம்

 உடுமலை . அ .இ .அ .தி .மு .க.பொது செயலாளர் செல்வி .ஜெ .ஜெயலலிதா அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து  கவுன்சிலர் வாசு தலைமையில் உண்ணாவிரதப்போராட்டம்  நடைபெற்றது .போராட்டத்தில் 2000-க்கும் மேல்  கலந்து கொண்டனர் .மானுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் .வாசுதேவ் ராம்குமார் ரவிச்சந்திரன்  உள்ளிட்ட  ஏராளமான  கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .கொட்டும் மழையுளும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது .முடிவில் அமராவதி பாசனசங்கத்தலைவர்  எஸ் .ராஜ்குமார் பழரசம் கொடுத்து  உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் .உடன்  வழக்கறிஞர் ராமகிருஸ்ணன்  கவுன்சிலர் வாசு  மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் . 

Oct 3, 2014

News


முள் செடியில் அமர்ந்து மௌன விரதம்



திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மண்ணரை தம்பி தோட்டத்தில் உள்ள வேப்பமர கருப்பணசாமி கோவிலில் அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி பூசாரி சுப்பிரமணியம் காலை 8 மணி முதல்,மாலை 5 மணி வரை முள் செடியில் அமர்ந்து மௌன விரதம் இருந்தார். அவருடன் 32வது வார்டு கிளை செயலாளர்  பிரிண்ட் பீல்டு தம்பி என்கிற சுப்பிரமணியம், நகர எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மூகாம்பிகை தங்கவேல்,முன்னாள் கவுன்சிலர் உமா தேவி, வி.எஸ்.பிரகாஷ், தங்கராஜ், குமார், சோமு,முத்துசாமி, மூர்த்தி, வெங்கடாசலம், நாராயணசாமி, வடிவேல் உள்பட பலரம் இருந்தனர். 

Oct 2, 2014

உடுமலையில் அ .இ .அ .தி .மு .க .வினர் உண்ணாவிரதம்



உடுமலை முக்கோணம் S .மனோகரன் அந்தியூர் ஊராட்சி செயலாளர் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் SKS .கந்தசாமி ex .ஒன்றியச்செயலாளர்  தலைமை v .இளங்கோவன் பூலங்கினறு ஊராட்சி  சீனிவாசன் கணபதிபாளையம் ஊராட்சி  s .சிவகுமார் சாலையூர்  ஊராட்சி பெரியபாப்பனூத்து  ஊராட்சி தலைவர் சண்முகவேல் கொடிங்கியம் p .செல்வராஜ்   சின்னபூலாங்கினர் சேகர் ,பாபு ,வேலூர் .UCN .கைரான் பெரியபாப்பனூத்து ஊராட்சி செயலாளர் VP .குப்புசாமி கிருஷ்னமாலதி அந்தியூர் ஊராட்சி தலைவர் ராதிகா  பூலாங்கினர் ஊராட்சித்தலைவர் ஜெயபிரகாஷ் ராகல்பாவி ஊராட்சித்தலைவர் வேலூர் ஊராட்சி  மன்றத்தலைவர்   ஜவகர்  ஜெகநாதன்  ஊராட்சி ஒன்றியத்துனைதலைவர் ஆறுச்சாமி ஒன்றிய செயலாளர் நன்றியுரை பூலாங்கினர் ஊராட்சித்தலைவர் ராஜி [எ ] ரங்கசாமி  ஒன்றிய பாசறை செயலாளர் மகேந்திரன் ம  .விஸ்வநாதன் கிளைகழகம்  பூலாங்கினர்  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் திருமதி .நீலவேணி சிதம்பரம் பூலாங்கினர்  பஞ்சாயத்துதலைவர் திருமதி .ராதிகா இளங்கோவன் பெரியபாப்பனூத்து  ஊராட்சி மன்ற தலைவர் திருமதி .சித்ரா கரிச்சிக்குமார் அந்தியூர்  ஊராட்சிமன்றத்தலைவர் திருமதி .கிருஷ்னமாலதி  மனோகரன் பூலாங்கினறு ஊராட்சி  ஒன்றிய உறுப்பினர் திருமதி .பாலாமணி ஆனந்தன் .

Oct 1, 2014

மூங்கில் தொழுவு சிற்றூராட்சி நால் ரோடு சந்திப்பில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம்






தலைமை தமயந்தி மாசிலாமணி  மாவட்ட  கவுன்சிலர் தலைமையில்  சி .மாசிலாமணி தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி முன்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம் எஸ் .கனகராஜ் உப  .தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி  வி .மயில்சாமி ஒன்றிய கவுன்சிலர்  சி .ஜெயபிரகாஸ்  மாணவரணி  செயலாளர் உட்பட 2000 ம் பேர்  உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர் .  

புரட்சிதலைவி அம்மா மீது பொய் வழக்குதீர்ப்பை கண்டித்து குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி ச .பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதம்








பெதப்பம்பட்டி  தொகுதிச்செயலாளர் பாண்டியன் தலைமையிலான அ .இ .அ .தி .மு .க .வினர் 2000 க்கும் மேற்பட்டோர்  புரட்சிதலைவி அம்மா மீது பொய்வழக்கு  போடப்பட்டு தண்டனையை  உடனே ரத்து செய்யக்கோரி உன்னாவிரதப்போராட்டம்  தலைமை ஏ .முருகன்  ஒன்றியக்குழு தலைவர்  எம் .எஸ் .முரளி ஒன்றியத்துனை தலைவர்  நிர்வாகிகள் அன்பர்ராஜன்  ராமநாதன் நாகராஜன் ஊராட்சித்தலைவர்  முருகானந்தன் ஜனார்தனன் வெங்கடேஷ் முருகன் செந்தில் கவுன்சிலர்கள்  புஸ்பராஜ் சித்ரா பாலமுருகன்  தண்டபாணி காந்திமதி பாசறைவிமலா  சவுந்தரராஜன் கமல் கோபி  முத்து  பூபதி செயலாளர்கள் முத்துச்சாமி  வரதராஜ்  சிவானந்தம் மகேஸ்வரன் நடராஜ்  ஆறுச்சாமி  சின்னராஜ் ஐயப்பன்  விருகல்பட்டி  பிரகாஸ்  தொடக்கவேளாண்மை  கூடுரவுசங்கத்தலைவர்   பன்னைக்கிணறு கார்த்திகேயன்  முடிவில் ஊராட்சிசெயலாளர்  அன்பர்ராஜா நன்றி தெரிவித்தார் 

உடுமலைபெரியகோட்டை ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் உன்னவிரதபோரட்டம் நடந்தது .






முன்னிலை p செல்வராஜ் uc  r . முருகேசன் சின்னவீரம்பட்டி சுப்பிரமணி uc .பாலு  அன்பழகன் குருஞ்சேரி பாலகிருஷ்ணன் மகாலிங்கம் ரத்தினசாமி சுப்பிரமணி ராஜேஸ்கண்ணா கருப்பசாமி முனி ,ராஜ் ,நாகராஜ் ,பாரதி பங்காரு ஒன்றிய பேரணி செயலாளர்  TT வடிவேலு  லோகன் மணி ,மஜீத் ,மாணிக்கம் ,ராம்லசுமணன்  மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர் .