Mar 20, 2021

திருச்சி மு.க. ஸ்டாலினுக்கு சவால் விட்ட கு.ப.கிருஷ்ணன்

 திருச்சி 

20.03.2021


திருச்சி மக்கள் நலனில் அதிமுக அரசு திருச்சி ஸ்ரீரங்கம் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் பிரச்சாரம் முக. ஸ்டாலினுக்கு சவால்


திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் இன்று மாலை அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உத்தமர்சீலி ,பனையபுரம், கிளிக்கூடு ,கவுத்தரசநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்போது அவருக்கு ஏராளமான பெண்கள்

 உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் அப்போது வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் பேசுகையில்


லால்குடி கூகுர்  முதல் கிளிக்கூடு வரைகாவிரி கொள்ளிடக் கரையில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என்றுதெரிவித்தார்.

மேலும் அதிமுக வெற்றி சாதனைகள் குறித்து பேசுகையில், தாலிக்கு தங்கம்வழங்கும்  திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.

 திருச்சி கிளிக்கூடு முதல் தஞ்சை மாவட்டம் வரைறனர் அதிமுக அரசியல் தான் சாலைகள் அமைக்கப்பட்டது

கொரோனா காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்ததின் காரணம் மாணவர்கள் மூலம்  நோய்கள் வரகூடாது என்றகாரணத்தினால்மட்டுமே.

ஸ்டாலின் தன்னை விவசாயி என்று கூறிக்கொள்கிறார் விதை நெல்லை எப்போது விதைக்க வேண்டும் எப்போது பறித்து நட வேண்டும் எப்போது அறுவடை செய்யவேண்டும் என்று தெரிந்தால் கூறட்டும் என பரப்புரையின் போது ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர்  கு .ப .கிருஷ்ணன் கேள்வியெழுப்பினார்.

அதனை தொடர்ந்து உத்மர்சீலி பகுதிக்கு சென்ற போது உற்சாகமாக மேள தாளத்துடன் வரவேற்றனர் அப்போது வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் வீடு வீடாக சென்று போது ஆரத்தி எடுத்து வரேற்ற போது, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். 

அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார்,ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார், அழகேசன் ,செல்வராஜ், நடராஜ் ,பனையபுரம் கர்ணன்

தமிழர் விடுதலைக் கழக திருச்சி மாவட்ட செயலாளர் பனையபுரம் P S சங்கர்,உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன் பிரச்சாரம்

 திருச்சி அதிமுக சார்பில் போட்டியிடும் மேற்கு தொகுதி வேட்பாளராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டார்.


இன்று அவர் வீடு வீடாக பிரச்சாரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை கூறி அதிமுகவிற்கு மேற்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இந்நிகழ்வின் போது அமைச்சர் வளர்மதி மாநில பொறுப்பாளர்கள் ரத்தினவேல் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பொதுமக்கள் நேரடியாக சந்திக்கக்கூடிய சந்திக்கக்கூடிய நபர் நான் பரஞ்சோதி பேச்சு

பொதுமக்கள் நேரடியாக சந்திக்கக்கூடிய சந்திக்கக்கூடிய  நபர் நான் பரஞ்சோதி பேச்சு



இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி ஈபி அலுவலகம் முதல் அமராவதி சாலை 49 இடங்களில் பரஞ்சோதி பிரச்சாரம் பிரச்சாரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்ஜோதி பொதுமக்களிடையே கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



மேலும் மண்ணச்சநல்லூர் தேர்தல் வாக்குறுதியாக

அய்யம்பாளையம் ஏவூர் ஆமூர் குணசீலம் ஊராட்சியில் சுமார் 2,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன்

காவேரி உப்பாறு நீர்த்தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்

கொடுந்துறை வாய்க்கால் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்படும்

விவசாயிகள் புஷ்ப வியாபாரிகள் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நொச்சியத்தில் இருந்து
ஸ்ரீரங்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்

மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் இளைஞர்களுக்காக மிகப்பெரிய பல்லாக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்

கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர் மாணவிகள் விடுதி அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைத்து தரப்படும்

சிறுகனூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும்

கோணலை ஏரியின் நீர் வரத்து நீர் கொண்டு வரும் வகையில் புதிய நீர் வழித்தடம் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் போருராட்சி ச கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை முடிவடைந்து அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரப்படும்


மணச்சநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து அரிசி ஆலைகள் நல்லநிலையில் இயங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்


அண்ணாநகர் புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் நரசிங்கமங்கலம் சேனியர் கள்ளிகுடி புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் மாணிக்கபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் மூன்று பழைய பாலம் இடித்து புதிதாக பேருந்து செல்லும் வகையில் அமைத்து தரப்படும்

இந்திரா நகர் வா உ சி நகர் மற்றும் மெயின் ரோடு பகுதிகளுக்கு குடிநீர் சுமார் ஒரு லட்சம் கன அளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தனலட்சுமி நகரில் அமைத்து தரப்படும்

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பக்தர்கள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் ஊருக்குள் செல்லுமாறு பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும்

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி மண்ணச்சநல்லூர் பகுதியில் 7 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை 600 மீட்டர் கேஸ்டில் பைப் லைன் அமைத்து தரப்படும்


உளுந்தம் குடி பெருவளை வாய்க்கால் மட்டும் புள்ளம்பாடி வாய்க்காலில் இரண்டு பாலம் அமைத்து தரப்படும்

மேல சீதேவி மங்கலம் இரண்டு பாலம் மற்றும் பங்குனி வாய்க்காலில் கொங்காளில் முத்தையன் கோவில் பாலம் ஒன்று அமைத்து தரப்படும் சமயபுரம் நடைபயணம் வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து தரப்படும் என அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ளார்

மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட முன்னாள் அமைச்சர் பூனாட்சி, அம்மா பேரவை செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் அமைச்சருமான அய்யம்பாளையம் ரமேஷ், மாவட்ட மாணவரணி மற்றும் திருப்பஞ்சலி கூட்டுறவு வங்கி தலைவர் அறிவழகன், ஒன்றிய செயலாளர்கள்
ஜெயக்குமார், ஆதாளி ஆமூர் ஜெயராமன், நகர செயலாளர் சம்பத் துரை, ராஜசேகர் மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ், நாகமணி, திருப்பஞ்சலி ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன், கல்பான ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், சிறுவளை ஊராட்சி மன்ற தலைவர் லதா, கதிர்வேல் கொரியர் சரவணன், எதுமலை விமலா, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் வெற்றிச்செல்வி மற்றும் கூட்டணி கட்சிகளான கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.