திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதி, குடிமங்கலம் ஒன்றியம்,பெரியபட்டியை அடுத்துள்ள கள்ளபாளையத்தைச் சேர்ந்த டி.மணிகண்டன் என்பவர் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்காக வேண்டி உயிர்த்தியாகம் செய்தார். அவரின் மனைவி பானுமதியிடம் அண்ணா தி.மு.க தலைமை கழகம் சார்பில் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது, சிறுபான்மைநலப்பிரிவு மாநில துணைச்செயலாளர் எஸ்.இன்பதுரை, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் வி.எம்.சண்முகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியச்செயலாளர் கே.சுகுமார், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஜி.வி.வாசுதேவன், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் சுந்தரசாமி, தொகுதி கழக செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் முருகன், உடுமலை நகரமன்றத் துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம்,ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, ஊராட்சிமன்றத்தலைவர்கள் சி.மாசிலாமணி, ஜனார்த்தனன், வீராச்சாமி, வழக்கறிஞர் சிவா, திலீப்குமார் மற்றூம் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.