Mar 26, 2019

திருச்சி விமான நிலையத்தில் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்


செம்பட்டு:  இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி வந்தது அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர் அப்போது 4 பேர் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவர்கள் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர் அப்போது அவர்கள் ஆசனவாயில் மறைத்து இலங்கையில் இருந்து கடத்தி வந்த ரூபாய் 49.5 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை உருக்கி பேஸ்ட் வடிவில் செய்து மறைத்து எடுத்து வந்ததை கண்டு பிடித்த நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல், அலி கான், காஜா, மற்றும் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அவர்களிடமிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள 1.9 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி டி டிவி தான் எங்கள் வெற்றிச் சின்னம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பேட்டி

திருச்சி மார்ச் 26

தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  மக்களவை மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-இல் மக்களவைக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோன்று புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. தற்போது  நிலவரப்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிட 721-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், 626 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவர். 2 பேர் மூன்றாம் பாலித்தனவர் ஆவர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை  காங்கிரஸ், தேமுதிக, மநிம கட்சி உட்பட 20 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். இதில் இரண்டு நபர்ள் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.

சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் போட்டியிட 257 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகியுள்ளன. 212 ஆண்களும், 45 பெண்களும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் 29-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணியளவில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அந்தந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் மே 23ஆம் தேதி எண்ணப்பட உள்ளன

திருச்சியில் அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கியது கடைசி நாளான இன்று தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சாருபால தொண்டைமான் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான  சிவராசுவிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருடன் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன்,மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்

அமமுக திருச்சி தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் பேட்டியில் கூறுகையில்


டிடிவி தினகரன் தான் எங்களது வெற்றி சின்னம்

அம்மா அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளர் நான். திருச்சி தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டுள்ளேன். திருச்சி புதிதல்ல. மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். பெரிய அளவில் வெற்றி பெறுவேன். சின்னம் குறித்த வழக்கின் தீர்ப்பை தமிழகம் முழுவதும் இன்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். எங்களது வெற்றி சின்னமே டிடிவி தினகரன் தான். எங்களது வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என்றார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தொழிலதிபர் கண்ணையன் அவர்களிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி தொழிலதிபர் பொன்மலைப்பட்டி கண்ணையனிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, இணைச்செயலர் சேட் ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவரிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி விஜய் ரசிகர் மன்ற மாவட்ட இளைஞரணி தலைவர் குடமுருட்டி கரிகாலனிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, இணைச்செயலர் சேட் ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் லிங்கம் நகர் பொது நல சங்க தலைவரிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி உறையூர் லிங்கம் நகர் பொது நல சங்க தலைவர் சிவக்குமாரிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.