Jul 24, 2015

Jul 23, 2015

PUDUKKOTAI AIADMK FREE CYCLES ISSUE THIRUMAYAM


TRICHY AIADMK KORADA MANOHARAN FREE ISSUE BY CYCLES TO THE SCHOOL CHILDRENS


Jul 22, 2015

Pudukkottai AIADMK issuing free by cycles

தமிழகம் முழுவதும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  புதுக்கோட்டை மச்சுவாடி அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றதில் தமிழ்தாய் பாடலுடன் துவங்கியது. தலைமையாசிரியர் பாரதியார் அனைவரையும் வரவேற்றார். எம்எல்ஏ கார்த்திக்தொண்டைமான் 200க்கும் மேற்ப்பட்ட  மாணவää மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் சேட்டு கவுன்சிலர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Jul 17, 2015

சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த மண்டல அளவிலான பயிலரங்கம் -வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார்



சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த மண்டல அளவிலான பயிலரங்கம் -வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த பயிலரங்கம் வருவாய்த்துறை செயலாளர் வெங்கடேசன் தலைமையில்  நடைபெற்றது.
இப்பயிலரங்கில் திருச்சிராப்பள்ளி கரூர் பெரம்பலூர்ää அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர்ää நாகப்பட்டிணம் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த  வருவாய் கோட்டாட்சியர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர்கள் கலந்து கொண்டனர்.  இப்பயிலரங்கை  வருவாய்த்துறை அமைச்சர் .உதயகுமார் தொடங்கி வைத்து பேசும்போது தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் 2011ம் ஆண்டு  ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதியோர்களுக்கான ஓய்வூதியத் தொகையை ரூ.500ல் இருந்து ரூ.1000ம் ஆக அதிகரித்து வழங்கிட ஆணைபிறப்பித்தார்கள். 2010-2011ம் ஆண்டில் 21 இலட்சம் பயனாளிகள் பெற்றுவந்த ஓய்வூதியத் தொகையின் ஒதுக்கீடு ரூ.1200 கோடியாகும்.  ஆனால்ää இன்று மத்திய அரசு வழங்கும் மூன்று திட்டங்கள் உட்பட மொத்தம் 8 ஓய்வூதியத் திட்டங்களில் ஏறத்தாழ 35 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.4200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1ää000ம் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தில் தகுதியுள்ள எந்த ஒரு பயனாளியும் விடுபடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கில் சொத்து மதிப்பின் உச்சவரம்பை ரூ.5ää000லிருந்து ரூ.50ää000மாக உயர்த்தி புதிய ஆணை வெளியிட்டுள்ளார்கள்.  முன்பு இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு மகனோ அல்லது மகளோ இருந்தால் பயன்பெற முடியாத நிலை இருந்தது.  ஆனால் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின் புதிய உத்தரவின்படிää பயனாளிக்கு மகன் அல்லது மகள் இருந்தாலும் அவர்கள் ஒரே வீட்டில்ää ஒரே குடும்பத்தில் வசித்து வந்தாலும் ஒரு பயனாளியை காப்பாற்ற  முடியாத நிலையில் வறுமை கோட்டிற்கு கீழிருப்பது தெரியவந்தால் கண்டிப்பாக அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்.  
இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் முதியோர் ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் வருவாய்த்துறை அலுவலர்களின் முழு ஒத்துழைப்புடன் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.  35 இலட்சத்திற்கு மேற்பட்ட பயனாளிகளின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள எவருக்கேனும் விடுபட்டு இருந்தால் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தால் உடனடியாக பரிசீலனை செய்து உரிய தீர்வு காணப்படும். ஆதார் அட்டை பெறுவது முக்கியமாக இருந்தாலும் சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவிகளைப் பெற ஆதார் அட்டை மட்டுமே தகுதி என எடுத்துக்கொள்ளக் கூடாது.
உற்றார்ää உறவினர்கள் கைவிட்ட நிலையில் தகுதியுள்ள ஒரு பயனாளிக்கு அவரின் இறுதி காலம் வரை உதவிட நான் இருக்கிறேன் என தாயுள்ளத்தோடு உதவி செய்யும் முதலமைச்சர் அவர்களின் உயரிய நோக்கம் தொடர்ந்து நிறைவேறிட வருவாய்த்துறை அலுவலர்கள் முழு ஈடுபாட்டுடனும் மனிதாபிமானத்துடனும் அணுகி தகுதியுள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்திட செய்திட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இப்பயிலரங்கில்  கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் பூனாட்சி அரசு தலைமைக் கொறடா மனோகரன் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையர் பிரதீப் யாதவ் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல் மாநகராட்சி மேயர் ஜெயா சட்டமன்ற உறுப்பினர்கள் சிவபதி பரஞ்ஜோதி இந்திராகாந்தி வளர்மதி துணை மேயர் சீனிவாசன் மாவட்ட ஊராட்சித்தலைவர் ராஜாத்தி மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ் மாவட்ட ஆய்வுக்குழ அலுவலர் அபிராமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.