அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட துயரத்தை தாங்கி கொள்ள இயலாமல் அகால மரணமடைந்த திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதி, குடிமங்கலம் ஒன்றியம், வெள்ளசெட்டிபாளையத்தைச் சேர்ந்த எம்.பழனியின் மகன் சண்முகத்திடம் ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், உடுமலையை அருகே உள்ள நரசிங்கபுரம்பகுதியை சேர்ந்த அண்ணா தி.மு.க.பிரமுகர் என்.வீரமணி என்பவர் தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி காசோலையையும், மடத்துக்குளம் தொகுதி, உடுமலை ஒன்றியம், தும்பலப்பட்டியைச் சேர்ந்த பி.கருப்புசாமி என்பவருக்காக அவருடைய மனைவி மஞ்சுளாவிடம் ரூ.3 இலட்சத்திற்கான காசோலையையும், உடுமலை தொகுதிக்கு உட்பட்ட கள்ளம்பாயத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி பானுமதியிடம் ரூ.3 லட்சம் உள்ளிட்ட 6 குடும்பங்களுக்கு அண்ணா தி.மு.க.சார்பில் ரூ.18 லட்சத்தை திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன்,கேபிள் டி.வி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.மகேந்திரன் எம்.பி.,சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நகராட்சி துணை தலைவர் எம்.கண்ணாயிரம் ஆகியோர் வழங்கினர்.
இந்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் பல் லடம் பரமசிவம் எம்.எல்.ஏ.,அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் எம்.சண்முகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியச்செயலாளர் கே.சுகுமார், மாவட்ட கவுன்சிலர்கள் ப.நடராஜன், தமயந் தி மாசிலாமணி, வாசுதேவன்,,மாவட்ட இணைசெயலாளர் ஜோதிமணி, மகளிர் அணி செயலாளர் சித்ராதேவி, குடிமங்கலம் ஒன்றியச்செயலாளர் சுந்தரசாமி, உடுமலை நகரமன்றத் துணைத்தலைவர் எம். கண்ணாயிரம், பல்லடம் வைஸ் பழனிசாமி, ஊராட்சிமன்றத்தலைவர்கள் மாசிலா மணி, ஜனார்த்தனன், வீராச்சாமி, கரைபுதூர் ஏ.நடராஜன், கே.ஆர்.பி.பாஸ்கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மயில்சாமி, நந்தகுமார், திலீப்குமார் பனியன் துரை மற்றும் அண்ணா தி.மு.க.சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.