Apr 3, 2020

திருச்சி ஆயிரக்கணக்கான வழக்குகள் தடை மீறியவர்கள் மீது

திருச்சி ஏப் 03

திருச்சி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 500 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல் ஹக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் 600 பேர் மீது 500 வழக்கு பதியப்பட்டு, 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், விதிமீறல் செய்தவர்கள் எனவும் என  2300 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி முதல் நேற்று
2558 நபர்கள் மீது

2151வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவரை 2228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரணமின்றி சுற்றித் இருந்ததாக மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல்
2வரை 19 ஆயிரத்து, 970 வழக்குகள் பதியப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ளார்.


திருச்சி மலிவு விலை காய்கறி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி ஏப் 03

திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.  இதையடுத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று இந்த விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள் 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழக அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடுகள் தோறும் சென்று இந்த காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை மக்கள் வாங்கி பயன் அடைந்து கொள்ள வேண்டும்.  வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். அதனால் கரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் இலவச முக கவசம் வழங்கினார்

திருச்சி மாநகரில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர்,

அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட 2500 பேருக்கு சானிடைசர், முகக் கவசம் உள்ளிட்டவை அடங்கிய பையினை மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ இன்று வழங்கினார்.