மதுரையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் முக ஸ்டாலின் ,தானும்,குழந்தைவேலுவும் மேயராக இருந்தபோது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறோம். அப்போது தி.மு.க.வின் எண்ணங்கள், கலைஞரின் கொள்கைகள் பற்றி பேசவாய்ப்பு கிடைத்தது.
சென்னை மேயராக இருந்தபோது, தான் செய்த சாதனைகள், திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள் பற்றியெல்லாம் எடுத்து கூறினார்கள். குழந்தைவேலு மேயராக இருந்தபோது, மதுரையில் சுற்றுவட்டச்சாலை, மேம்பாலங்கள், பாதாள சாக்கடை இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அவர் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.இப்போது நடைபெறும் ஆட்சியில், இதுபோன்ற பொதுப்பணிகள் நடைபெற்று இருக்கிறதா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். என கேள்வி எழுப்பினார் .இதற்கு பதில் அளிக்கிற வகையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மேயர் ராஜன் செல்லப்பா ,திமுக கடந்த 15 ஆண்டு காலம் மாநகராட்சியில் பதவி வகித்தும் ஒரு நன்மை கூட மதுரை மக்களுக்கு செய்யவில்லை ,இப்போது அதிமுக அரசின் மீது தவறான புகார் கூறுகின்ற முக ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதும் அவரது அண்ணன் மத்திய அமைச்சராக இருந்த போது மதுரைக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார்.அப்போது நிறைவேற்றப்படமடாமல் அரை குறையாய் விடப்பட்ட மேம்பால திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக ஆட்சி தான்.அவர்கள் 600 கோடியில் திட்டங்களை நிறைவேற்றியதாக சொல்வதெல்லாம் உண்மைக்கு மாறானது .அந்த திட்டத்திற்கு மாநகராட்சி நிதியை பயன்படுத்தாத காரணத்தால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 250 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி தந்ததாக குறிப்பிட்டார் .மேலும் மழையால் சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கபப்டும் .விதிமுறை மீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது .கிருதுமால் நதி வாய்க்கால் தோண்டுகிற பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார் .பேட்டியின் போது துணை மேயர் திரவியம் ,எம் எல் ஏ க்கள் சுந்தர்ராஜன் ,முத்துராமலிங்கம் ,மண்டல தலைவர் சாலைமுத்து,சுகந்தி அசோக் ,வழக்கறிஞர் ரமேஷ் ,நிலையூர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்