Dec 15, 2014

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை 1000 ரூபாயாக உயர்கிறது- செல்லூர் ராஜு பேச்சு

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத் திறனாளிகள் சம வாய்ப்புகள் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை 1000 ரூபாயாக உயர்த்தியது; ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு வரும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு சத்துணவு; சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை ஆகியவை இருமடங்காக உயர்வு; அரசுமற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ,மாணவிகளின் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையில் உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை; மாற்றுத் திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பை அதிகரிக்கும்வகையில் தேசிய திரைப்படக் கழகத்தின் மூலம் பல்லூடகப் பயிற்சி (Multimedia
Training) மற்றும் இலக்கமுறை புகைப்படப் பயிற்சி (Digital Photographic
Training) என பல்வேறு நலத் திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தியாவிலேயே முதன்முறையாக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் வழங்கப்படுவது; சென்னையில் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகை, சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்; பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத வீடுகள் ஒதுக்கீடு; ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் சிறப்புத் தேர்வு; ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு; ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டிருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 45-லிருந்து 18-ஆக குறைப்பு; இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள்; செவித்திறன் குறையுடைய குழந்தைகளுக்கு 2 நவீன காதொலிக் கருவிகள்; பார்வைத்திறன் குறையுடைய மாணவ,மாணவிகளுக்கு எழுத்துகளைப் பெரிதாக்கி படிப்பதற்கான கருவிகள்; பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குச் குச்சிகள்; மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை; குடும்பத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்பயன் போன்ற எண்ணற்ற சீர்மிகு திட்டங்களை இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா துவக்கினார். அவரது வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அவற்றை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக வாழ்ந்திடவும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்,

அமைச்சர் அவர்களின் தலைமையில்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்ட உள்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற இருப்பதால் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் தலைமையில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ...இதில் எராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..