திருப்பூர் அடுத்துள்ள அழகுமலை வானவஞ்சேரியில் கடந்த 1200 ஆண்டுகளுக்கு முன் கூண் பாண்டி மன்னரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ பெரியநாயகி உடனமர் அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில்அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, கூட்டணி கட்சியான மாவீன் தீரன் சின்னமலை பேரவை சார்பில் பெரியநாயகி ஸ்ரீ ருத்ரயாகம்‘ நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவீரன் தீரன் சின்னமலை பேரவை மாநில பொதுச்செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி தலைமை தங்கினார்.மாநில தலைவர் வி.கே.முருகேசன், கௌரவதலைவர் கே.எம் முருகேசன், பொருளாளர் எஸ்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.செயலாளரும், வனத்துறை அமைச்சருமான் எம்.எஸ்.எம்.ஆனந் தன் ருத்ர யாக பூஜைகளை நடத்தி வைத்து அன்னதானத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மகளிர் அணி மாநில துணை செயல்லாரும், மேயருமான் அ.விசா லாட்சி, எம்.எல்.ஏ.,க்கள் சண்முகவேலு, நடராசன், பொன்னுசாமி, சத்யபாமா எம்.பி., துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவச்சலம், பல்லடம் தொகுதி செயலாளர் லோகநாதன், நிலவள வங்கி தலைவர் புத்தரச்சல் பாபு, உகாயனூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழனிசாமி, ஜெயஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரி தாளாளர் கே.எம்.தங்கராஜ், கவுன்சிலர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர் சிவசுப்பிரமணி, மாநகர் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், உஷாரவிக்குமார், எஸ்பி.என் பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, ராஜ்குமார், அர்ஜுனன்ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவ பெருமானை வேண்டி மனமுருகி எஸ்.எம்.பரமசிவ குருக்கள் தலைமையில் 8 சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு யாக பூஜைகளை நடத்தினர்.