திருப்பூர் மாவட்ட சி.ஐ.ஐ., அமைப்பு, தமிழக அரசின் தொழில் துறை வளர்ச்சிக்கான கருத்தரங்கு காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஹோட்டலில் நடந்தது.
கூட்டத்துக்கு சிஐஐ திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை தங்கினார்.சிஐஐ தமிழகத் தலைவர் ரவிசாம் முன்நிலை வகித்தார். தமிழக தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி, ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி, சத்யபாமா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பரமசிவம், கருப்பசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.
கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி பேசியதாவது:-
தமிழக முதல்வராக ஜெயலலிதா 3வது முறை பொறுப்பேற்ற 3 வது நாளில் திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சினைக்கு வட்டியில்ல கடனாக ரூ.200 கோடி கொடுத்ததால்தான் இன்று தொழில் பனியன் சிறப்பாக இருக்கிறது என்று தொழில் துறையினரே கூறுகின்றனர். இங்கே தொழிலை விட்டு விட்டு செல்லப்போவதில்லை என்று நீங்களே சொல்வதிலேயே தமிழகம் தொழில் செய்வதற்கு சிறப்பாக உள்ளது என்று தெரிகிறது தொழில் துறையினர் நினைத்து பார்க்க வேண்டும், கர்நாடகா உள்ளிட்ட வேறு மாநிலங்களை விட தமிழகத்தில் தான் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இங்கிருந்து தொழிற்சாலைகள் வேறு எங்கும் செல்லாத அளவுக்கு மக்கள் முதல்வர் ஜெயலலிதா பார்த்து உள்ளார்.தமிழகத்தில் அனைவரும் கடுமையான உழைப்பாளிகள்; அதனால் தான் தமிழகம் சிறப்பாக இருக்கிறது.
திருப்பூரை பொறுத்த வரை இங்கே இருக்கிற ஒவ்வொருவரும் தமது உழைப்பை கொடுத்து இம்மாநகரை முன்னேற்றி இருக்கிறீர்கள். அதற்கு மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு தேவையான பாதுகாப்பு வழங்குகிறது. அந்த அளவுக்கு சட்டத்தின் ஆ ட்சி நடக்கிற மாநிலமாக தமிழகம் உள்ளது. உங்களுக்கு என்ன தேவையோ அதை ஜெயலலிதா செய்கிறார். உங்கள் தேவை என்ன என்று கேட்பதற்காக தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஜெயலலிதா வழிகாட்டுதலுடன் திருப்பூரில் கடந்த ஒரு மாதம் முன்பே மகளிர் விடுதி கட்ட ஆலோசிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடக்கிறது. திருப்பூரில் ஆய்வு மையம் அமைக்க ஜெயலலிதா கூறி நடவடிக்கை எடுக்கபடும்.
உங்களுடைய பிரச்சினை எது என்றாலும் அதை உடனடியாக தீர்க்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தொழில் செய்ய வருபவர்களுக்கு ஆட்சியாளர்கள் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்படுகிறது.தொழிலையும் பாதுகாக்க வேண்டும்; அதே சமயம் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிரது. உங்களுக்கு தேவையான தொழிலாளர்களுக்கான பயிற்சி மையம் கேட்டிருக்கிறீர்கள் அதையும் ஏற்பாடு செய்ய மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள தொழில் முனைவோர் முதலீடுகள் செய்வதற்கு வேறு மாநிலங்களுக்கு செல்லாமல் தமிழகத்தையே தேர்வு செய்திட வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு மே மாதம் நடத்த உள்ள தொழில்துறை மாநாட்டில் திருப்பூர் தொழில்துறையினர் அதிகளவில் பங்கேற்று ரூ.10,ஆயிரம் கோடி அளவுக்கு தமிழகத்திலேயே முதலீடு செய்வதற்கான உறுதியை அளிக்க வேண்டும்.
தென் தமிழகத்தில் தொழில் துவங்கினால் நிலத்தின் மதிப்பில் 50 சதவீதம் குறைத்து ஜெயலலிதா அறிவித்துள்ளார். அப்பகுதியில் தொழில் துவங்க அரசு உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும். சி பாரம் பிரச்சினையை சம்பந்தப்பட்ட துறையில் தெரிவித்து, தீர்வு காணப்படும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மட்டும் தான் நல்ல சலுகைகளும், பாதுகாப்பும் கிடைக்கிறது. மக்கள் முதல்வரின் அரசு தொழிலுக்கு என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும்
இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் பேசியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில், மிகப்பேரிய அளவில் இந்தியாவிலேயே பின்னாலாடையில் சிறந்து விளங்குகிறது. நீட்ஸ் என்கிற திட்டத்தை மக்கள் முதல்வர் ஜெயலலிதா தீட்டி, அத்திட்டத்தில் ஜெயலலிதா 50 சதவீதத்தை தர செய்தவர். மகளிருக்கென சேலம், சென்னையில் தொழிற்பேட்டையை அமைத்து தந்த இந்த அரசு அவரது வழிகாட்டுதலின் பேரில் . இன்றைக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்கள் பின்னலாடை ஏற்றுமதி செய்கிறது. 18 ஆயிரம் கோடி வர்த்தகம், 20 லட்சம் பேருக்கு வாய்ப்பு அளிக்கிறது. உலகளவில் 4 சதவீத அளவில் இம்மாநகர் ஏற்றுமதி செய்கிறது.
தமிழ்நாடு அரசால் இந்த துறை மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு ஒற்றை சாளர தேர்வு பணிகள் இணைய தளம் மூலம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை அம்மாவின் அரசு ஆய்ந்து தீர்த்து வைக்கும்.சாலை வசதிகள், தொழிற்பேட்டைகள் கேட்டுள்ளனர். ஏற்கனவே 2 இடங்களில் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பின் படி ராசாத்தா வலசில் பெரிய தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் 20 பேர் சேர்ந்து தொழில் நடத்த முனைந்தால் அதற்காக ரூ.0 கோடி வழங்க அரசு தயாராக இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் மக்களின் முதல்வர் அரசு மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் திட்டம் மூலம் 15.62 கோடி ரூபாய் மானியமாக வழங்கி இருக்கிரார். வேலை வாய்ப்பற்றவர்களுக்கு ரூ.1.97 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டு மானியமாக 9.3 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில் நலனுக்காக ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் ப.மோகன் பேசினார்.
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது ஆட்சி பொறுப்பேற்றவுடன் தி.மு.க.ஆட்சியில் கைவிடப்பட்ட சாய சலவை பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என கூறினார். அவருக்கு ஆதரவளித்து பெரும்பான்மையான வெற்றியை பெற்று தந்த திருப்பூர் வாழ் மக்களுக்கும், தொழில் துறையினருக்கும் நன்றி செலுத்தும் வகையில் ஆட்சி பொறுப்பேற்ற 3 நாட்களில் மக்கள் முதல்வர் அதற்கான நடவடிக்கை எடுத்தார். அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து சாயா, சலவை பிரச்சனை குறித்த அறிக்கை கேட்டு, தீர்வு காண ஆணையிட்டார். சாயப்பட்டறை அதிபர்களை அழைத்து பேசி, தொழிலையும் காப்பாற்ற வேண்டும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்கிற அடிப்படையில் தீவிரமாக ஆராய்ந்து , வட்டியில்லா கடனாக ரூ.200 கோடி யை அள்ளி கொடுத்து திருப்பூரின் தொழிலை காப்பாற்றிய மாபெரும் முதல்வர் ஜெயலலிதா. இதன் காரணமாக இந்த தொழில் இன்று நல்ல நிலைக்கு வந்து உள்ளது. இன்றைக்கு எல்லா இடத்திலும் தொழில் நன்றாக இருக்கிறது என்று கூறுகின்றனர். அதற்கு காரணம் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான். எனவே என்றைக்கும் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தரும் அவரை என்றும் நீங்கள் மறந்து விட கூடாது. இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, இன்றைக்கு திருப்பூர் மாநகர் அந்நிய செலாவணியை அதிக அளவில் ஈட்டி தருகிறது. உங்களுக்கு கவலையே இருக்க கூடாது என்று தான் மக்ல்கின் முதல்வர் ஜெயலலிதா மின் பற்றாக்குறை தீர்க்க பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததார். இங்கு பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் ரூ.87 கோடிக்கு சாலை வசதிகள் மட்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசு பின்னலாடை தொழில் வளர தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மண்டல தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம், விஜயகுமார், பட்டுலிங்கம் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது, சி.ஐ.ஐ., தலைவர் ராஜா சண்முகம், மாநில தலைவர் ரவிசாம், துணை தலைவர் மைகோ வேலுசாமி, ஸ்ரீதரன், கே.பி.ஜி. கோவிந்தசாமி, வைகிங் ஈஸ்வரன், டீமா முத்துரத்தினம், விஜயகுமார், டெக்பா ஸ்ரீகாந்த்,ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.