Mar 13, 2021

திருச்சி அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் கு.ப.கிருஷ்ணன்

 வீடு வீடாக சென்று அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் கு.ப.கிருஷ்ணன்


திருச்சி அதிமுக நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கு.ப.கிருஷ்ணன் இன்று ஸ்ரீரங்கம் பகுதியில் அதிமுக நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள நெடுந்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

ஆதரவு கேட்டு சென்ற இடங்களில் கு.ப.கிருஷ்ணனுக்கு கட்சி நிர்வாகிகளும், அவர்களது குடும்பத்தாரும் சிறப்பான வரவேற்பளித்தனர்.