Sep 14, 2016

. திருச்சிராப்பள்ளி பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி

திருச்சி 14.9.16           

. திருச்சிராப்பள்ளி  பூம்புகார் விற்பனை நிலையத்தில்  கொலு பொம்மைகள் கண்காட்சி

மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமிகுத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி சிங்காரத்தோப்பில் உள்ள தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்  திருச்சிராப்பள்ளி சிங்காரத்தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டுகொலு கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிசாமி  குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கண்காட்சியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
கொலுபொம்மை கண்காட்சி இன்று (14.09.2016) முதல் வருகின்ற 13.10.2016 வரை (ஞாயிறு உட்பட) நடைபெறுகிறது.    இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள் கொலு செட்டுகள் கொண்டபள்ளி பொம்மைகள் மரப்பாச்சி பொம்மைகள் காகிதக்கூழ் பொம்மைகள் மண் பளிங்குகல் மாக்கல் நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.2000 iர் பொம்மைகள் விற்பனைக்காக இடம் பெற்றுள்ளன என்றார்
மேலாளர் கங்காதேவி கூறுகையில் சென்ற ஆண்டு விற்பனை இலக்கு ரூ.10 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த வருடம் கண்காட்சியில் விற்பனை இலக்கு ரூ.15 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.               
                இக்கண்காட்சியில் கிரிக்கெட் சஞ்சீவி செட் பெருமாள் ஊர்வலம் செட  நவ கன்னிகள் செட் பானை கிருணன் செட் தசாவதாரம் செட் கையிலாய மலை செட் கார்த்திகை பெண்கள் செட் ஸ்ரீரங்கம் செட் அன்னபூரணி செட் விநாயகர் செட் மகாலெட்சுமி வரம் செட் மாயா பஜார் செட் சீனிவாச கல்யாணம் செட் மீனாட்சி கல்யாணம் செட் மும்மூர்த்தி செட் ராமர் பட்டாபிகம் செட்தாத்தா பாட்டி செட்பெருமாள் தாயார் செட்  ராமர் பாலம் செட் சுக்ரீவர் பட்டாபிகம் செட் கனகதாரா செட் முருகர் உபதேசம் செட் கஜேந்திர மோட்~ம் செட்மாங்கனி செட் கீதா உபதேசம் செட் ஜோதிர்லிங்கம் செட் பரத நாட்டியம் செட் அசோகவனம் செட் பீஸ்மர் அம்பு படுக்கை செட் கனையாழி செட் ஆழ்வார் செட் கோபியர் டான்ஸ் செட் விவசாய செட் தாட்டங்கி செட் ஜடாயு மோட்சம் செட் ராமர் செட்  அகலியா சாப மோட்~ம் செட் முதலான பொம்மைகள் கல்கத்தா  மணிப்பூர்  இராஜஸ்தான் ஒரிஸா ஆந்திரா கர்நாடகா பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள் எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் இடம் பெற்றுள்ளன.           
                இவ்வாண்டு சில சிறப்பு காட்சி மற்றும் விற்பனைக்காக ராமர் ஜனனம் தசரத தர்பார்அகலிகை மேட்சம்; குகன் ஓடம் சபரி விருந்து மாரீசன் (பொன்மான்) லெட்சுமனன் ரேகைராவணன் தர்பார் அசோக வனம் ஜடாயு மோட்சம் சப்தமாதர் ஜல்லிக்கட்டு குருவாயூர் கண்ணன் தெரு கூத்துகண்ணப்பர் செட் ராமேஸ்வரம் பூஜை செட் லவகுச பட்டாபிகம் செட் நவக்கிரக செட் துர்கா பூஜை செட் சீதா கல்யாண செட் ஐஸ்வர்யம் செட் பொய்கால் குதிரை ராதை அலங்கார செட் ஞானபழம் செட் பஞ்சவடி செட்  ராமர் பாலம் செட்  ஸ்ரீரங்கம் செட்   பல்லாங்குழி செட்  மாயா பஜார் செட் வாஸ்து பெருமாள் மந்தி போஜன செட் மல்யுத்த செட் பிரமோற்சவம் செட் இட்லி கடை செட் கருமாரி பூஜை கேரள கதகளி  காமாட்சி விளக்கு பூஜை நக்கீரர் செட் ராஜா மாதாங்கி செட் தத்தாதிரியர் ஆகிய பொம்மை செட்கள் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியில் சிறப்பம்சமாக சந்தன மரக்கட்டைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. எல்லா கடன் அட்டைகளுக்கும் எவ்வித சேவை கட்டணமும் இன்றி ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை பொதுமக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடலாம். தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையத்திற்கு பொதுமக்கள் நல்லாதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மேலாளர் .கங்காதேவி   தெரிவித்தார்.
 விழாவில் பூம்புகார் விற்பனை நிலையத்தின் மேலாளர் .கங்காதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி  கங்காதேவி

திருச்சி 14.9.16தமிழக முதல்வரை அவமானப்படுத்திய கர்நாடக முதல்வரின் உருவபொம்மையை சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே எரிக்க முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்கட்சியினர்

திருச்சி 14.9.16
தமிழக முதல்வரை அவமானப்படுத்திய கர்நாடக முதல்வரின் உருவபொம்மையை சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே  எரிக்க முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்கட்சியினர்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் வழியுறுத்தலின் பேரில் தமிழகம் எங்கும் ஆர்பாட்டம் நடைபெறுகிறது அதன் ஒரு பகுதியாக சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகேயும் ஆர்பாட்;டம் நடைபெற்றது
அப்பொழுது மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில் தமிழக முதல்வரை அவமானப்படுத்தி பேசிய கர்நாடக அரசை கண்டித்தும் தமிழர்களின் மீது வன்முறை தாக்குதல் கர்நாடக அரசை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
ஆர்பாட்டத்தி;ல் திடீர் என்று கர்நாடக முதல்வரை கண்டிக்கும்வகையில் கர்நாடக முதல்வரின் உருவபொம்மை எரிக்க முயன்றனர் இச்சம்பவம் அண்ணாசிலை அருகே பரபரப்பு ஏற்ப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்; செயலாளர் ரஜேந்திரன் தலைமைதாங்கினார். மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மாவட்ட பொருளாளர் செல்வம் மாநகர செயலாளர் முகிலன் மாநகர இளைஞரணி  செயலாளர் ரமேஷ்  மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ராமு திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் கார்த்தி துறையூர் ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி ரஜேந்திரன்

திருச்சி 14.9.16தமிழக முதல்வரை இழிவு படுத்தி பேசிய கர்நாடக அரசை கண்டித்தும் இந்த சாலை மறியல்

திருச்சி 14.9.16                சபரிநாதன் 9443086297

தமிழர்களின் 200கோடி சொத்துக்களை சு10றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சத்திரம் பேருந்து நிலையம்; அண்ணாசிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாநில கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் கூறுகையில்  உச்ச நீதி மன்ற தீர்ப்பின் பிறகும் தண்ணீரை தரமறுக்கும் கர்நாடகஅரசை கண்டித்தும் சட்டவிரோதமாக தமிழர்களின் 200 கோடி சொத்துகளை கூ10றையாடி சேதப்படுத்திய கன்னட வெறியர்களைகண்டித்தும் தமிழக முதல்வரை இழிவு படுத்தி பேசிய கர்நாடக அரசை கண்டித்தும் இந்த சாலை மறியல் என தெரிவித்தார்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 20 வதுக்கும் மேற்ப்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி;ச்சென்றனர் இச்சம்பவம் சத்திரம் பேருந்து அண்ணாசிலை அருகே பரபரப்பு ஏற்ப்பட்டது

பேட்டி பெரியார் சரவணன்.