திருச்சி ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா 22.07.2017(சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் பேராசிரியர் க. பொன்னுச்சாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சு. சத்தியமூர்த்தி அறிக்கை வாசித்தார். விழாவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விவகாரங்கள் துறை இயக்குநர் முனைவர் எ. இளையபெருமாள் பல்கலைக்கழக தரவரிசையில் தேர்ச்சி பெற்ற 13 மாணவ மாணவியருக்கு பட்டம் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இவ்விழாவில்; 962 மாணவ மாணவியர் இளங்கலை மற்றும் முதுகலையில் பட்டங்களைப் பெற்றனர்.
மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பு விருந்தினர் பேசியதாவது: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறங்;களைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்களில் 60மூ பேர் மட்டுமே தேர்வுளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெறுகின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து தங்கள் வாழ்க்கை விதத்தையும் வேலை வாய்ப்புகளையும் மற்றும் சமுதாய சிந்தனையும் கொண்டு வாழ வேண்டும் என வலியுத்தினார். தேர்வுகளை எதிர்கொள்ளும் 60மூ மாணவர்களை மூன்று பிரிவுகளாக பிரித்தார். அதில் முதல் 20மூ பேரை தமிழிலும் ஆங்கிலத்திலும் எவ்வாறு எழுதுவது என்று கூட தெரியாதவர்கள் அதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. அடுத்;த 20மூ பேர்; படிப்பு சார்ந்த அறிவு சிறிதுமின்றி தங்கள் துறைக்கு சம்மந்தம் இல்லாத வேலைக்கு செல்கின்றனர். கடைசி 20மூ பேர் நல்ல அறிவுத்திறன்இ தொழில்நுட்பத்திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றைக் கொண்டு மிகச் சிறந்த வேலையை பெறுகின்றனர். ஆசிரியர்களாகிய எங்கள் ஒவ்வொருவருடைய ஆசையும் எண்ணமும் என்னவெனில் எங்கள் மாணவர்கள் ஒவ்வொருவரும் அதிகார மிடுக்கோடும் ஆளுமைதிறனோடும் வாழவேண்டும் என்பதே ஆகும். மேலும் தன்னுடைய உரையில் அறிவும் திறமையும் பெற்றிருந்தால் இந்த உலகமே உங்களுடையது என்றார்.
சிறப்பு விருந்தினர் தன்னுடைய வாழ்;க்கையே உதாரணமாக மாணவர்களிடையே கூறி சாதனையாளர்கள் அனைவருமே வசதியான குடும்பத்தில் இருந்து வருபவர்கள் அல்லர். பெரும்பான்மையான சாதனையாளர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர்கள் ஆவர். வெற்றி பெறுவதற்கு தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் மற்றும் நல் அறிவும் போதுமானவை ஆகும்.
இன்றைய மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர்களுக்கும் தங்களை உருவாக்கிய கல்வி நிறுவனங்களுக்கும் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். உங்கள் பெற்றோர்களையும் நீங்கள் கல்வி பயின்ற கல்வி கூடங்களையும் மறந்தால் அதுதான் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாவச்செயல் என்றார். தன்னுடைய உரையை இறுதியாக ஒரு தமிழ் கவிதையுடன் அழகாக முடித்தார்.
அக்கவிதை “அரிது அரிது மானிடராதல் அரிது… எனக்கூறி அப்பேர்பட்ட மானிடப்பிறப்பை பெற்ற நாம் அதன் கடமையை செவ்வேனே செய்வோம் என மாணவர்களை வாழ்த்தி தன் சிறப்பு உரையை இனிதாக முடித்தார். பட்;டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் கல்லூரி முதல்வரின் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்னர் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.