திருச்சியிலிருந்து 773வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பாக தடை உத்தரவு அமலில்
உள்ளதால் தமிழக முதலமைச்சர் வெளிமாநில
தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தின் பேரில் அந்தந்த மாநிலங்களுக்கு
பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஆணையிட்டுள்ளார்.
அதன்படி 15
மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த புலம் பெயர்ந்த இராஜஸ்தான் மாநிலத்தை
சேர்ந்த தொழிலாளர்கள் 773 நபர்கள் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் ரயில்
நிலையத்திலிருந்து சமூக இடைவெளி கடைபிடித்து இரவு உணவு வழங்கி
சிறப்பு இரயில் மூலம் பயணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு இன்று (22.05.2020) அனுப்பி வைத்தார்