Sep 24, 2014

ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நிதி, வணிகவரித்துறை திட்டங்கள் பற்றி ஆலோசனை



சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நேற்று (23–ந் தேதி) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிதித்துறை, வணிகவரித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டன.

பின்னர் அதுபற்றி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது என்று தலைமைச் செயலக வட்டாரம் தெரிவித்தது.