திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 141 வது புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.மு.ராஜாமணி இ.ஆ.ப.. அவர்கள் இன்று காலை (04.06.2017) பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்ற பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் தற்போது வறட்சியான சூழ்நிலை நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளுக்கு போதிய அளவு தமிழக அரசு நிதி வழங்கி இருக்கிறது. குடிநீர் பிரச்சனை இருக்கும் இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சார்பில் குடிநீர் பிரச்சனைக்கு போதிய அளவு நிதி வழங்கி இருக்கிறது. கூடுதலாக ஊரக நகர்புற வளர்ச்சி நிதியிலிருந்தும் குடிநீர் பிரச்சனை தீர்க்க நிதி வழங்கப்படுகிறது. நிதி ஒரு பிரச்சனையாக இருக்காது. குடிநீர் பிரச்சனைக்கு முற்றிலுமாக தீர்வு காணப்படும்.
மாவட்டத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள்ää திட்டங்கள் துறை வாரியாக அலுவலர்களுடன் கலந்தாலோசித்து ஒவ்வொன்றாக முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும். புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும். மேலும் மக்கள் நலக் கோரிக்கைகள் ஏதேனும் இருந்தால் எனது கவனத்திற்கு உடனடியாக கொண்டு வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.ராஜாமணிஇ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.தர்ப்பகராஜ்மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.மலர்விழி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி.அபிராமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்