Dec 4, 2014

திருப்பூர் பள்ளியில் சமையற் அறையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்

திருப்பூர் மாநகராட்சி 6வது வார்டு கவிதா லட்சுமி நகரில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி சமையலறை மற்றும் தண்ணீர் தொட்டிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூர் கவிதா லட்சுமி நகர், 15வேலம்பாளையம் நகராட்சியாக செயல்பட்டபோது பெரியார் காலனியில் உள்ள துவக்கப்பள்ளியில் இருந்து கடந்த 2003ம் ஆண்டு பிரித்து சாதாரண ஓலை குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி வேலம்பாளையம் நகராட்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் 6வது வார்டாக மாற்றப்பட்டு கடந்த 2010-11ம் ஆண்டு கட்டிடமாக கட்டப்பட்டது. இதில் 16 குழந்தைகள் மட்டுமே படித்து வந்த நிலையில் தற்போது தலைமை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் உள்பட 6 ஆசிரியர்களுடன் 115 மாணவ, மாணவியர்கள் கல்வி கற்று வருகின்றனர்.. 
தமிழக முதல்வராக ஜெயலலிதா 3வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பள்ளிகளுக்கும் சுகாதார வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், நவீன சத்துணவு கூடம் அமைக்க உத்திரவிட்டார். அதன் அடிப்படையில் இந்த பள்ளிக்கூடம் கடந்த 3 ஆண்டில் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில் இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு சுகாதரமான முறையில் சத்துணவுகளும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பள்ளிக்கு இணையாக அணைத்து வசதிகளும் இந்த பள்ளியில் அமைக்கப்பட்டு இப்பள்ளி திகழ்கிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாணவ, மாணவியர்கள் முதன்மையாக தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
மேலும் இப்பள்ளிக்கு மெருகூட்டும்  வகையில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் இருந்து நவீன சமையல் அறை கட்டுவதற்கு ரூ.4.80 லட்சம் ஒதுக்கீடு செய்ய அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிந்துரை செய்தார். மேலும் தரை மட்ட தண்ணீர் தொட்டி கட்ட மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.4 லட்சம் ஒதுக்கப்பட்டது. 
இந்த இரு பணிகளும் முடிக்கப்பட்டு இதன் திறப்பு விழா பள்ளியில் நடைபெற்றது.புதிய கட்டிடத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் வி. ராதாகிருஷ்ணன், ஜெ.ஜான்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர்கள் வி.கே.பி.மணி மற்றும் எம்.மணி, நகர சீரமைப்பு குழுத்தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் சத்யா, கல்பனா, ஈஸ்வரன், திலகர்நகர் சுப்பு, சின்னசாமி,செந்தில்குமார், மற்றும் அண்ணா தி,மு,க,நிர்வாகிகள்  ஈஸ்வரன், ஸ்டீபன்ராஜ்,  டி.டி.பி.தேவராஜ், ஏ.எஸ்.கண்ணன், வி.எம்.கோகுல், நீதிராஜன்,மாநகராட்சி முதன்மை பொறியாளர் ரவி, மண்டல உதவி ஆணையாளர் சபியுல்லா, உதவி பொறியாளர், அலுவலர்கள், தலைமை ஆசிரியர் கற்பகம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



ரூ.11.09 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார்.

பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11.06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில் தெற்கு அவினாசிபாளையம், பொங்கலூர், மாதப்பூர் ஆகிய 3 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு தான் பொதுமக்கள் செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இடப்பற்றாக்குறையால் இயங்கி வந்த  இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள்  அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். அவரதுவழிகாட்டுதலின் பேரில், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் ரூ.11.06 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. 



விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்,தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.சிவாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், மாமன்ற கவுன்சிலர் எம்.கண்ணப்பன், மாநகராட்சி நிலைக்குழுத்தலைவர் அன்பகம் திருப்பதி, வளர்மதி கூட்டுறவு சங்க துணைத்தலைவர் எம்.மணி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், தண்ணீர் பந்தல் ப.நடராஜ் உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கரைபுதூர் நடராஜன், உகாயனூர் பழனிசாமி, திருப்பூர் கால்நடைத்துறை துணை இயக்குனர் டாக்டர்.சண்முகவேல், உதவி இயக்குனர்கள்  டாக்டர்கள் ராமச்சந்திரன், பிரபாகரன்,கால்நடை உதவி மருத்துவர் ஜெகநாதன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் புத்தரச்சல் பாபு, சித்துராஜ், வி.எம்.கோகுல் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் நீதிராஜன், அர்ஜுனன், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.