ஸ்ரீரங்கம் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட கு.ப.கிருஷ்ணன் வெற்றி பெற்று வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போதும் அவர் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக சென்னையில் இருந்து கு.ப.கிருஷ்ணன் திருச்சி வந்தார்.
ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு கு.ப.கிருஷ்ணன் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி பனையபுரம் கர்ணன் அதிமுக பிரமுகர்கள் மகளிர் அணி செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் அதிமுக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்