திருப்பூர் மாநகர் மாவட்டம், அண்ணா தி.மு.க.சார்பில், மாவட்ட கழக செயலாளரும்,வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசாமி திருக்கோவிலில் கட்சியில் பொதுசெயலாளார் ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பில் இருந்து மீண்டு வந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது..இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன் வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், திருமுருகன்பூண்டி பேரூராட்சி தலைவர் பழனிசாமி,துணை தலைவர் விஸ்வநாதன், முன்னாள் தலைவர் லதா சேகர், அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், தொகுதி செயலாளர் சேவூர் வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.