May 23, 2020

திருச்சி ரம்ஜானை முன்னிட்டு முஸ்லீம்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இலவச மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார்

திருச்சி 

மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
                   

சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து தனது தொகுதி மக்கள் கஷ்டப்படாமல் இருக்க திருச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான  அமைச்சர்வெல்லமண்டி நடராஜன் மனிதநேயத்துடன் தனது தொகுதிவார்டு வாரியாக இலவசமாக சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி வருகிறார்

                   
   

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில்  அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி  வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 50 நாட்களுக்கு மேலாக  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து   தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். 

தற்போது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வருகிறது அதற்காக ஏழை எளிய முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இலவச பொருட்கள்

திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் இருந்த இடத்தில் மக்களை வரிசையாக சமூக இடைவெளி விட்டு நாற்காலியில் அமரச்செய்து ஒருவர் பின் ஒருவராக சமூக இடைவெளி பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

 நிவாரண தொகுப்பு பைகளில் அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


 இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவஹர்லால் நேரு, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன்,வெல்லமண்டி சண்முகம், மகளிர் அணியைச் சேர்ந்த ஜாக்லின், மற்றும் சந்திரு, கணேஷ் உட்பட  சார்ந்த அதிமுகவை சேர்ந்த  கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பகுதி தொகுதி செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை

திருச்சி மே 23

திருச்சியில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் அவரது திருவுருவச்சிலைக்கு
மாவட்ட ஆட்சியர்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று காலை 8.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வருவாய் துறை கோட்டாச்சியர் விஸ்வநாதன் மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொது மக்களின் நலன் கருதியும கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே
144தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள் மற்றும் எந்த கட்சியினரும் அமைப்பும் 
கலந்து கொள்ள வேண்டாம் எனவும்,
மேலும், திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திகிறார்..

திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி நிகழ்ச்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்

*திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் Covid-19 சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்*


கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசு  கடந்த மார்ச் முதல் தற்போது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் சாமானியர்கள் நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்.

இன்று திருச்சி மாவட்ட மத்திய வங்கியின் Covid-19 சிறப்பு கடனாக  நகைக்கடன் மிகக் குறைந்த வட்டியில் 58 பைசாவில் சுய உதவி குழுக்களின் மூலம் சிறப்பு கடன் வழங்கப்படுகிறது.

நகை கடன் திட்டத்தின் கீழ் கிராமிற்கு 3,000 ரூபாய் வீதம் 7% குறைந்த வட்டி வீதத்தில் 6 மாத காலத்திற்கு நபர் ஒருவருக்கு  ஒரு 5,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 2660 குழுக்களும் சங்க அளவில் 1190 குழுக்களும் உள்ளது.

இதில் Covid-19 சிறப்பு கடன் உதவிக்கு தகுதியுள்ள 75 குழுக்களுக்கு ரூ62.50 லட்சம் கடன்  வழங்கப்பட்டது.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.