Dec 31, 2014

திருப்பூரில் வழக்கம் போல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், பொது வாழ்கைக்கு பாதிப்பு இல்லாமல் வழக்கம் போல பஸ்களை இயக்க அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன நேற்றும், இன்றும் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் ஆகியோர் நேரில் சென்று பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் காங்கேயம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று பஸ்களை இயக்க அதிகாரிகளுடன் துணை மேயர் சு.குணசேகரன், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் உடுமலை கிருஷ்ணன் ஆகியோர்களுடனும் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அமைச்சருடன் தொழிற்சங்க மண்டல பொருளாளர் பொன்னுசாமி, கவுன்சிலர்கள் எம்.கண்ணப்பன், சண்முகம், நிர்வாகிகள் தங்கமுத்து, கண்ணபிரான், வளர்மதி சாகுல் ஹமீது, சின்னு, அ.கண்ணப்பன், திருப்பூர் கிளை அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் செயலாளர்கள் ராஜேந்திரன், சரவணன் மற்றும்  ரவிக்குமார், மாரிமுத்து, சிவகுமார், கணேஷ், கிளை மேலாளர் குணசேகரன் உள்பட பலர் உள்ளனர். 
இதே போல் பல்லடம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,ஆகியோர் நேரில் சென்று இயக்க நடவடிக்கை மேற்கொண்டனர். உடுமலை பகுதியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் முன்னால் அமைச்சர் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., ஆகியோர் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்., தாராபுரத்தில் கே,போன்னுசாமி எம்.எல்.ஏ.வும்,காங்கயத்தில் என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ.,வும் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் காலை முதல் வழக்கம்போல் இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



புத்தாண்டு நிகழ்ச்சி மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை

திருப்பூர்,டிச.31-
புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் ஆபாமான கலை நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர்சேஷசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் அனைத்து பத்திரிகைகளுக்கும்   அனுப்பியுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31.12.2014-ம் தேதி இரவில் உள் அரங்கினுள் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். திறந்த வெளியில் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை. 
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதத்தில் ஆபாசமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நிகழ்த்த அனுமதியில்லை. 
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில், அனுமதிக்கப்பட்ட நபர்களைத் தவிர மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது.
அரசு அனுமதி பெற்ற மதுபானக் கூடங்களைத் தவிர பிற இடங்களில் மது வழங்கக்கூடாது. 
தனியார் தங்கும் விடுதியில் உள்ள நீச்சல் குளங்களை 31.12.2014 இரவு 08.00 மணி முதல் 01.01.2015 காலை 06.00 மணி வரை யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. 
புத்தாண்டு தின கொண்டாட்டங்கள் சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் இரவு 01.00 மணிக்குள் முடித்துக் கொள்ளவேண்டும்.  
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பொழுது, எந்த ஒரு அசம்பாவிதமும் நடவாமல் இருக்கத் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்க வேண்டும். 
புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வாகன நிறுத்தும் வசதிகள் செய்திருக்க வேண்டும்.  
நள்ளிரவில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களில் சென்று பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிப்பவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இசைக் கருவிகளையோ ஒலிபெருக்கிகளையோ அதிக ஒலியுடன் பயன்படுத்தக்கூடாது.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பயன்படுத்தக்கூடாது. 
தற்காலிகமாக அமைக்கும் மேடைகளுக்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி பெற வேண்டும்;இ தகுதிச்;சான்று பெறப்பட்டிருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத வகையில் புத்தாண்டு தினத்தைக் கொண்டாட வேண்டும். 
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மேடையில் ஆடுபவர்கள் மேடைகளின் இருந்து யாரும் கீழ் இறங்கி வர அனுமதிக்கக் கூடாது. கீழிருந்து யாரும் மேல் ஏற அனுமதிக்கக் கூடாது.
பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருத்தல் வேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அனைத்தையும் ஊஊவுஏ கேமிராவில் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.
ஹோட்டல் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கக் கூடாது.
மேற்கண்டவாறு மாநகர காவல் ஆணையாளர் எஸ்.என்.சேஷசாய் தெரிவித்தார்.

திருப்பூர் அரசு போக்குவரத்து பனிமனையில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாம்



தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (தி.மு.க.ஆதரவு) ஊழியர்கள் ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 29ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாமிட்டு இன்றும்போக்குவரத்துக் கழக ஊழியர்களிடம் பேசி இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது துணை மேயர் சு.குணசேகரன், தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், பொன்னுசாமி, கண்ணப்பன், ராஜேந்திரன், சரவணன்,ரவிகுமார்,கண்ணபிரான்.ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு





திருப்பூர் அரசு போக்குவரத்து பணிமனைகளில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆய்வு .திருப்பூரில் இருந்து கோவை .உடுமலை.பழனி.மதுரை உட்பட அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ்  துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மண்டல தலைவர் .ராதாகிருஷ்ணன். அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம்.கண்ணப்பன், கண்ணபிரான்.உள்ளிட்டோர் பங்கேற்றனர்.