சென்னைவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவையை வரும் 29ம் தேதி நண்பகல் 12 மணிக்கு முதல்வர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதி நண்பகல் 12 மணியில் இருந்து மெட்ரொ ரயில் சேவை தொடங்கும்