Apr 6, 2020

திருச்சி முசிறியில் தமிழக அரசு அறிவித்தபடி மலிவு விலை காய்கறி விற்பனை துவக்கம்

திருச்சி முசிறி


முசிறி தெருக்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் காய்கறிகள் விற்க ஏற்பாடு  எம் எல்ஏ துவக்கி வைத்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தெருக்களில் சென்று காய்கறிகளை விற்பதற்காக லோடு ஆட்டோ மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது .முசிறி பேரூராட்சி சார்பாக வாரந்தோறும் புதன்கிழமை திருச்சி ரோட்டில், டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள சந்தையில் காய்கறிகள் விற்பனை நடைபெறும் .இந்த வார சந்தையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வீட்டிற்கு பயன்படுத்துவது வழக்கம் .இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வார சந்தை விடுமுறை விடப்பட்டது. இதனால் வியாபாரிகள் சந்தையில் கடை போடுவது தடைபட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு காய்கறிகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது .தெருக்களில் வந்து காய்கறிகள் விற்கும் வியாபாரிகள் சிலர் அதிக விலைக்கு காய்கறிகளை விற்றதால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக லோடு ஆட்டோ ஒன்றில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக உழவர் சந்தையில் வாங்கி வியாபாரத்திற்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து முசிறியைச் சேர்ந்த குடும்பத்தலைவிகள்  வாரந்தோறும்,  காய்கறிகளை சந்தையில் வாங்கி பயன்படுத்தி வந்தோம். வாரசந்தை நடைபெறாததால் சிரமம் ஏற்பட்டது. அதனை போக்கும் வகையில் பேரூராட்சி பேரூராட்சி நிர்வாகம் தெருக்களில் காய்கறிகளை விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது மிகுந்த ஆறுதலைத் தருகிறது பொதுமக்களுக்கு கட்டுப்படியாகும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது என்றனர். முன்னதாக காய்கறி விற்பனையை முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், முசிறி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்  ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.அப்போது மாவட்ட கவுன்சிலர் ரவிசந்திரன் , பேரூராட்சி தலைமை எழுத்தர் சேவியர் சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.