அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற நத்தம்பட்டி, வழிவிடு முருகன் திருகோயிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளை வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து இருந்து விடுதலை பெற்று, மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, நிலையான நல்லாட்சி வழங்க வேண்டி, வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகேயுள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலில் ஷ்கந்த ஹோம யாகம் மற்றும் கணபதி ஹோம யாகத்தை பட்டர்கள் நடத்தினர்.
நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவர் கனகுஅம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டனர்.