May 17, 2018

திருச்சி கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள் முதல் கட்டமாக ஆய்வு

திருச்சி   17.5.18

திருச்சி தீரன் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்குப் பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் இராசாமணி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழக அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.வரும் கல்வியாண்டு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக பராமரிக்கப் படுகிறதா ஆய்வு செய்யப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்கள் 100% உறுதி செய்யப்படும் அனைத்து பள்ளி வாகனங்களும் இந்த மாத இறுதிக்குள் ஆய்வு செய்து முடிக்கப்படும்.

பள்ளி வாகனங்கள் ஆய்வை வருவாய் துறை மற்றும் இதர துறைகள் மூலம் கண்காணிக்கப்படும். பள்ளி வாகனஒட்டுனர்களுக்கு உடல் தகுதி, கண் பரிசோதனை போன்றவை ஆய்வு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களின் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.இந்த ஆய்வில் பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் வாகனங்களை தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

அந்த வகையில் திருச்சி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு உட்பட்ட 152 வாகனங்கள் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 17 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதி சான்று தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பள்ளி வாகனங்களும் முதலுதவி பெட்டி, அவசர கால வழிகள் உள்ளதா, டயர் மற்றும் பிரேக் திறன் ஆகியவற்றில் குறைபாடு இருப்பின் பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்.

ஆய்வின் போது பள்ளி வாகனஒட்டுநர்களுக்கு Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவனை செய்யப்பட்டு 152 ஒட்டுநர்களில் 16 ஒட்டுநர்க்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த பள்ளி தாளாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டுநர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை எப்படி அணைப்பது தொடர்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், ஆய்வின் போது சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், திருச்சி சரகம் துணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி, உதவி காவல்துறை ஆணையர் அருணாச்சலம், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசை தம்பி, மணப்பாறை மோட்டார் வாகனம் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, மேற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அனிதா, முகமது மீரா ஆகியோர் உடன் இருந்தனர்