திருச்சி - 17-07-2016 சபரிநாதன் 9443086297
41வது அகிலஇந்திய மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி - ஹிமாச்சலபிரதேச அணி கோப்பையை வென்றது
அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கபடி போட்டி திருச்சி கடந்த 14ம் தொடங்கி நடைபெற்று வந்தது. தேசிய அளவில் நடத்தப்படும் 41வது போட்டியான இந்த போட்டியில் தமிழ்நாடு டெல்லி பஞ்சாப் சட்டீஸ்கர் தெலுங்கானா இமாச்சல பிரதேசம் குஜராத் மகராஷ்டிரா உள்ளிட்ட 16 அணிகள் விளையாடின. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணியும்ää பஞ்சாப் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணி 36 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 22 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றது. ஹரியானா 3வது இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மைதுறை அமைச்சர் வளர்மதி மின்சாரவாரிய திருச்ச் மண்டல தலைமை பொறியாளர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.