காகம் மற்றும் எலிகள் தவிர்த்து மற்ற எந்த விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பாம்பு ஆகிய எதை பிடிக்க முயற்சித்தாலும், வேட்டையாடினாலும் குற்றமே என்பதன் அடிப்படையில்
திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்,வனவா்கள்,மதன்ராஜ், சரவணன் மற்றும் வனக்காப்பாளர்கள்
சரவணன், ரவி, ஞானசம்மந்தம் ஆகியோர் (வனத்துறையின்) ரோந்து பணி சோதனை மேற்கொண்டபொழுது மணச்சநல்லுா், வலையூர் கிராமத்தை சாா்ந்த 1. ஜெயபாலன் (35), 2.கோபிநாத் (38), மற்றும்
3.கோபிநாதன் (35) ஆகிய மூன்று நபர்கள் விவசாய நிலத்தில் முயல் பிடிக்க கன்னி சரம்(Trap) வைத்திருந்தது தெரிய வந்தது.
மேற்கண்ட மூவர்களை பிடித்து விசாரணை செய்த போது வேட்டைக்காக கன்னி வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேற்காணும் சம்பவம் தொடா்பாக வன உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் படி வேட்டையாட முயற்சித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் மாவட்ட வன அலுவலர், சுஜாதா IFS உத்தரவின் படி ரூபாய்.15,000/- இனக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.