திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மண்ணரை தம்பி தோட்டத்தில் உள்ள வேப்பமர கருப்பணசாமி கோவிலில் அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி பூசாரி சுப்பிரமணியம் காலை 8 மணி முதல்,மாலை 5 மணி வரை முள் செடியில் அமர்ந்து மௌன விரதம் இருந்தார். அவருடன் 32வது வார்டு கிளை செயலாளர் பிரிண்ட் பீல்டு தம்பி என்கிற சுப்பிரமணியம், நகர எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் மூகாம்பிகை தங்கவேல்,முன்னாள் கவுன்சிலர் உமா தேவி, வி.எஸ்.பிரகாஷ், தங்கராஜ், குமார், சோமு,முத்துசாமி, மூர்த்தி, வெங்கடாசலம், நாராயணசாமி, வடிவேல் உள்பட பலரம் இருந்தனர்.