திருப்பூர் மாநகர் மாவட்டம், மாநகராட்சி 2வது மண்டலம் 23வது வார்டு அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில், நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ஹரிஹரசுதன், பழனிசாமி, தவசிமுத்து ஆகியோர் முன்னிலையில் என்.ஆர்.கே.புரம் மாநகராட்சி பள்ளி அருகில் அண்ணா தி.மு.க.வினர் மற்றும் வார்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட உண்ணாவிரத போராட்டம் நடந்தது.