ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து இன்று திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில், முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்காத குறையைத் தீர்த்து வைத்தனர் சூர்யா, விக்ரம், கார்த்தி போன்றவர்கள். விஜய், அஜீத் போன்றவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவருமே இன்று உண்ணாவிரதத்துக்கு வரவில்லை. மூத்த கலைஞர்கள், அதிமுக அனுதாபிகள், சின்னத்திரைக் கலைஞர்கள் மட்டுமே திரண்டு வந்து உண்ணாவிரதப் பந்தலை நிறைத்தனர். மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள கலைஞர்கள் என்று யாருமில்லையே என பேச ஆரம்பித்துவிட்டனர் நடிகர் நடிகைகளைப் பார்க்கலாம் என்ற ஆர்வத்தில் வந்திருந்த மக்கள். இந்த நிலையில், உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மதியத்துக்கு மேல் வந்தனர் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம், சூரி ஆகியோர். அவர்களைத் தொடர்ந்து இயக்குநர் பாலாவும் வந்தார். முன்னணி நடிகைகள் ஒருவர் கூட இதுவரை வரவில்லை. வருவார்கள் என்றும் நம்பிக்கையில்லை. கடைசி நேரத்தில் மேலும் சில முன்னணி நடிகர்கள் ஆஜராகக் கூடும்.