Oct 5, 2014

நாளை தனியார் பேருந்துகள் ஓடாது






சென்னை, அக். 4:அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலிதாவுக்கு ஆதரவு தெரிவத்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பஸ்கள் ஓடாது என்று தமிழ்நாடு பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி அறநிலை போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தனியார் அமைப்புகள், பொதுநல சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களின் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனியார் பேருந்துகள் இயங்காது. மேலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதம் நடைபெறும்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பஸ்கள் ஓடாது. தமிழகத்தில் 6 ஆயிரம் தனியார் பஸ்கள் உள்ளன. 2 ஆயிரம் பஸ் ஆபரேட்டர்கள் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.