Oct 5, 2014

கோவை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக அதிமுக.வினர் உண்ணாவிரதம்

கோவை மாவட்டத்தில் மூன்றாவது நாளாக அதிமுக.வினர் உண்ணாவிரதம்

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று மூன்றாவது நாளாக அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிறப்பு பூஜைகள், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனைமலை மாசாணியம் மன் கோவிலில் ஆனைமலை பேரூராட்சி தலைவர் ஏ.ஆர்.வி.சாந்தலிங்க குமார் தலைமையில் அவரது மனைவி கலைச்செல்வி சாந்தலிங்க குமார் உள்பட 300–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த பெண்கள் அம்மனுக்கு மிளகாய் அரைத்து வேண்டுதல் செய்தனர்.
அப்போது ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என மாசாணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் தங்கம் செந்தில், காளியம்மாள், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோட்டூர் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவர் பூங்கோதை துரைசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் அப்புசாமி, நகர செயலாளர் கோட்டூர் பாலு, ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி வாசு, ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கோட்டூர் குணசீலன், நில வங்கி தலைவர் ஆறுமுகம், கூட்டுறவு கடன் சங்க தலைவர் திருமலைசாமி, நடிகர் சூர்யகாந்த், மாவட்ட பிரதிநிதி துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆனைமலை பெத்தநாயக்கனூரில் பஸ் நிலையம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் 150 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டாமுத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் திடலில் 200 பெண்கள் உள்பட 1000–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிச்சி நகர அ.தி.மு.க. சார்பாக குறிச்சி நகர செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் அ.தி.மு.க.வினர், சுந்தரா புரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கவுன்சிலர்கள் செந்தில்குமார், வேணு கோபால், நிஜாம், கவுரி, சாவித்திரி, முன்னாள் எம்.எல்.ஏ. ரோகினி, பாலாஜி ராமகிருஷ்ணன், சற்குரு, குறிச்சி மரியா, தண்டபாணி, ரவி, சேகர், பழனிசாமி, பூக்கடை ரவி, அண்ணாதுரை, சிவசாமி, பிரகாஷ், ராஜேந்திரன், மகளிரணி பூங்கொடி மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.
மதுக்கரை ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக ஒன்றிய செயலாளர் எட்டிமடை சண்முகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் கோரி ஆபீஸ் பஸ் நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தில் மதுக்கரை பேரூராட்சி தலைவர் சண்முகராஜா, மதுக்கரை ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் வக்கீல் கே.பி.காமாஜ், மருதாசலம், வெள்ளலூர் பாலகிருஷ்ணன், வக்கீல் காமராஜ், குறிச்சி மணிமாறன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.
சூலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் சூலூர் ஒன்றிய தலைவர் மாதப்பூர் பாலு தலைமையில்உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் தாமோதரன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் தோப்பு அசோகன்,தொகுதி செயலாளர் லிங்கசாமி, பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் சண்முகம், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மகாலிங்கம்,சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பூபதி, இருகூர் பேரூராட்சி தலைவர் பத்மசுந்தரி, மோப்பிரி பாளையம் பேரூராட்சி தலைவர் தெப்பீஸ்வரன், இருகூர் நகர செயலாளர் ஆனந்த குமார், ராதாமணி, சூலூர் பேரூராட்சி தலைவர் தங்கராஜ், செந்தில் குமார், அருகை ஜெகன், கந்தவேல், மீரா, சுப்ரமணியன், சூலூர் கந்தசாமி, ரமேஷ், கார்த்தி உள்பட கலந்து கொண்டனர்.
அவினாசி சேவூரில் கைகாட்டிபுதூரில் அ.தி.மு.க. வினர் தொகுதி செயலாளர் வேலுச்சாமி தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது உண்ணாவிரத பந்தலில் இருந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் மாறன் தனது தலையில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அ.தி.மு.க.வினர் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
வால்பாறையில் காந்தி சிலை பஸ் நிறுத்தம் அருகே அ.தி.மு.க.வினர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வால்பாறை அமீது தலைமையிலும் நகர செயலாளர் மயில்கணேசன் முன்னிலையிலும் உண்ணாவிரதம் இருந்தனர். கவுன்சிலர்கள் தனராஜ், நெல்லை செல்வன், மாலினி, பூங்கொடி, மாவட்ட பாசறை இணை செயலாளர் சலாவுதீன், நகர துணை செயலாளர் பொன் கணேசன், அம்மா பேரவை செயலாளர் நரசப்பன், பேரவை தலைவர் பாபுஜி, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை மூடீஸ் பகுதியில் இன்று கடைகளும் அடைக்கப்பட்டன.
பொள்ளாச்சி வடக்கிப்பாளையம் பிரிவில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சக்திவேல், வடக்கு ஒன்றிய குழு தலைவர் செல்வி பத்மினி, ஆச்சிப்பட்டி ஊராட்சி தலைவர் ரங்கநாதன், துணை தலைவர் பழனிச்சாமி, நெகமம் பேரூராட்சி தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அ.தி.மு.க.வினர் 15–க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்தனர்.