தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி முன்னாள் சட்டசபை உறுப்பினர் திருச்சி சவுந்திரராஜன் தலைமையில் இந்தியா வாழ் ஈழத் தமிழர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
இன்று சென்னை கோயம்பேடு செங்கொடி அரங்கத்தில், இந்தியா வாழ் ஈழத் தமிழரின் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புரட்சி பாரதம் பொதுச்செயலாளர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.