மடத்துகுளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ.தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் நடைபயணம் சென்று ஜெயலலிதா விடுதலையாக கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர்.
திருப்பூர்மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில்அண்ணா தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டிகொழுமம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும், நடைபயணமாக கொமரலிங்கம், மி.நீலம்பூர், மடத்துக்குளம்,கழுகரை, சோழமாதேவி, கணியூர் வழியாக காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவில், நீலம்பூர் முனியப்ப சுவாமி கோவில், செங்குளம்தர்கா ஆகிய இடங்களில்
சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஒன்றியச்செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை, கொமரலிங்கம்பேரூராட்சி துணை செயலாளர் எஸ்.ராஜ்குமார், அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், மாவட்ட கழக துணைச்செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித்தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத்தலைவர் ஜி.கே.தண்டபாணி, மடத்துக்குளம் வீட்டு வசதி கூட்டுறவு சங்க தலைவர் இயேசுதுரை, குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவலிங்கம், ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் சிவலிங்கம், கணியூர் பேரூராட்சித்தலைவர் தேவி, துணைத்தலைவர் கணியூர் காஜா மைதீன், கணியூர் ராஜ், காரத்தொழுவு ரவி, சோழமாதேவி இப்ராகிம், சந்திரசேகர்,கொழுமம் தலைவர் இந்திராணி, கொழுமம் ராகவன், அண்ணா தொழிற்சங்கம் சி.டி.சி. மகாலிங்கம், ரத்தினசாமி, பழனிச்சாமி, சி.டி.சி. தங்கவேலு, தம்பிதுரை, பாபு, பாலு, முருகன், கருப்புசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிவாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.