மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்பேற்கவும் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமையில்,ஒன்றிய செயலாளர் நா.அண்ணாத்துரை, திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், அமராவதி பாசன சபைத் தலைவர் ராஜ்குமார், பேரூராட்சித் துணைத் தலைவர் தண்டபாணி, ஆகியோர் முன்னிலையில் கழுகரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,பேரவை செயலாளர் சிவலிங்கம், வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் யேசுதுரை, நீலம்பூர் செல்வராஜ், கழுகரை பாபு, கவுன்சிலர்கள் பாலு, குணா,தண்டபாணி, சுப்பிரமணி, கணியூர் காஜா மைதீன், தேவி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.