May 6, 2020

திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* 

நமது மாவட்டத்தினை சார்ந்த 51 நபர்கள் கொரோனா வைரஸ் நோய் 
பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 47 நபர்கள்
பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வருகை 
புரிந்த 28 நபர்கள் மற்றும் இதர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த 
667 நபர்களுக்கு இரத்த பரிசோதனை செய்ததில் ஏற்கனவே 4.5.2020 அன்று 4 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 
304 நபர்களுக்கு இன்று(5.5.2020) ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 303 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 நபருக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 9 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9
நபர்களும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 12 நபர்களுக்கும் புதுக்கோட்டை 
மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 31 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர். 
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி 
மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல்
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். 
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இருக்கஎன்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி 
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் 
அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சிராபபள்ளி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக 
தடைசெய்யபபட்டு தனிமை படுத்தப்பட்ட பகுதிகளான துவரங்குறிச்சி தொட்டியம் அலகரை ஆகிய 
இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் இன்று  நேரில் 
சென்று பாவையிட்டு ஆய்வு செய்தார். 



 சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருசசிராப்பள்ளி மாவடடத்திற்கு வருகை 
புரிந்த 28 நபர்களையும் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படடுள்ளது.
தனிமைப்படுத்தபபட்ட நபர்களின் வீடுகளில் சுகாதார துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ்
ஒட்டப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. துவரங்குறிச்சி மற்றும் தொட்டியம் வட்டம் அலகரை 
ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு தனிமைப்படுத்தபபட்டவர்கள் 14 நாடகள் தனிமையில் 
இருக க வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். 
இந்நிகழ்சசியில் முசிறி கோடடாட்சியர் (பொ)பழனிதேவிமருங்காபுரி வட்டாட்சியர் 
சாந்தி தொட்டியம் வட்டாட்சியர் மலர் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்
செந்தில்,ரவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

திருச்சி வனச்சரக அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது

திருச்சி வலைவீசி முயல் பிடிக்க  முயற்சித்தவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் தலைமறைவு

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்  வனவா் சரவணன்   மற்றும் 


வனக்காப்பாளா் கருப்பையா, ஜான் ஜோசப் வனக்காவலா் சுகாஷினி ஆகியோர் திருச்சி வனச்சரகம், கண்ணனூா் பகுதி பகளவாடி காப்புகாட்டில்,  வேட்டையாடிய காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி 27/2020 மற்றும் 
சங்கா்(Driver-தலைமறைவு)25/2020 ஆகிய இருவர்  வலை வைத்து முயல் பிடித்த குற்றத்திற்காக  கைது செய்து  
வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 2(1), 2(16)(a)( b), 2(35), 2(37), 9, 39(1)(d), 50, 51(1)  & IPC 188, 269, 270, 271  
r/w 3 of Epidemic Act 1897 & 134, 135 TN Public Health Act 1939 r/w 51(d) Disaster Management Act 2002 படி
துறையூா் நீதிமன்ற நீதிபதி அவா்கள் உத்தரவுபடி 15 நாட்கள் சிறைகாவலில் அடைக்கப்பட்டனா். Hero Splendor இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

Apr 25, 2020

திருச்சி கபசுரக் குடிநீர் பற்றி தலைமை சித்த மருத்துவர் காமராஜ் விளக்கம்


கபசுரக் குடிநீர் பருகினால் கொரோனாவைத் தடுக்கலாம்!
அரசு தலைமை சித்த மருத்துவர் காமராஜ் விளக்கம்

திருச்சி

சித்தர்கள் கண்டறிந்த கபசுரக் குடிநீரை தினமும் பருகினால் கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பிற்குள்ளாவதைத் தடுக்கலாம் என சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் கூறியுள்ளார்.


நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்துவரும் நிலையில், திருச்சி டாக்டர் அப்துல்கலாம் பொதுமக்கள் நலன் சங்கம் சார்பாக, வயலூர் ரோடு, குமரன் நகர், சிவன் கோவில் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் கபசுரக் குடிநீர், முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் குறித்து பேசிய திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ், கபசுரக் குடிநீர் என்பது சாதாரண மருந்து. அது பல ஆண்டுகளுக்கு முன்பாக சித்தர்கள் கூறிய அருமருந்துகளில் ஒன்று. ஓலைச்சுவடியில் எழுதிவைக்கப்பட்டிருந்த இந்த மருந்தின் மகத்துவம் புரிந்து தற்போது பல புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனை கரோனா வைரஸிலிருந்து மக்களை காக்கும் அருமருந்தாக தற்போது தமிழ்நாடு அரசும் அங்கீகரித்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கி வருகிறது. நுரையீரல் தொடர்பான நோய்களான, சளி, இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்றவைக்கு இந்த மருந்து மிகவும் முக்கியமானது. இந்த கபசுரக் குடிநீரில் 15 வகையான மூலிகைகள் அடங்கியுள்ளன. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் உதவியது போன்று, கபசுரக் குடிநீர் அனைத்து நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும். ஒன்று முதல் இரண்டு கிராம் கபசுரக் குடிநீர் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் காய்ச்சி, வடிகட்டி பெரியவர்கள் 60 மிலி, குழந்தைகள் 30 மிலி காலை வேளைகளில் பருகலாம்.கரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையில் சளி,காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த குடிநீரை பருகலாம். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. குறிப்பாக சர்க்கரை நோய்க்கு இது சிறந்த மருந்தாகும். இந்தக் குடிநீர் உடலுக்கு நோய்த் தடுக்கும் மருந்தாக உள்ளது. இந்தக் குடிநீரினை ஆங்கில மருந்து உண்பவர்களும் எவ்வித தயக்கமுமின்றி எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்த மருந்து வெளிச்சந்தையில் 100 கிராம் 370 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவற்றில் பல போலியானவையாக உள்ளதால் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படும் மருந்தினை பயன்படுத்தலாம் எனக் கூறினார்.கபசுர குடிநீர் பருகினால் கொரோனாவைத் தடுக்கலாம் என்றார்.

   இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அரசு சித்த மருத்துவர்கள் தலைமை சித்த மருத்துவர் காமராஜ்  டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின்  டோரோ,  டாக்டர்.இசையமுது  அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் பொதுமக்கள் நலன் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சி மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச கபசுரக் குடிநீர்

திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது

திருச்சி தமிழக அரசு ஆரோக்கியம் திட்டத்தின் கீழ்  தொற்று பரவாமல் இருக்க  எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில்  கபசுர குடிநீர் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டு  பொதுமக்களுக்கு  பணியாளர்களுக்கு  வழங்கப்பட்டு வருகிறது.

  அதனடிப்படையில்  இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இலவசமாக கபசுர மூலிகை பாக்கெட் வழங்கப்பட்டது திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியாக சித்தாவில் பயன்படுத்தப்படும் கபசுர மூலிகை பாக்கெட்டுகளை மாநகராட்சி ஆனையர் சிவசுப்பிரமணியன,பொன்மலை கோட்டம் உதவி ஆணையர் தயாநிதி, திருச்சி பீமநகர் சித்த மருத்துவமனை மருத்துவர் ரத்தினம், ஆகியோர் கலந்துகொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர மூலீகை பாக்கெட் வழங்கினார் இதில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு வாங்கி பயனடைந்தனர்

திருச்சி அரசு சித்த மருத்துவர்கள் மற்றும் அப்துல் கலாம் மக்கள் நலச் சங்கம் சார்பில் பகுதி வாழ் மக்களுக்கு கபசுர குடிநீர்

*தொடர் சேவையில் அரசு சித்த மருத்துவர்கள்*

தமிழ்நாடு அரசின் "ஆரோக்கியம்" திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர்  இன்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர்.சா.காமராஜ் அவர்கள் தலைமையில் திருச்சி , வயலூர் சாலை, குமரன் நகர்,சிவன் கோவில்  பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.இதில் மருத்துவர்கள் டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின்  டோரோ,  டாக்டர்.இசையமுது  ஆகியோர் பங்கு பெற்றனர். நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இன்று மாலை 5 மணிக்கு திருச்சி கீழபுலிவார் ரோடு ,ஆனந்தா அவென்யூ பூங்காவில் இதே போன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apr 23, 2020

திருச்சி அம்மா உணவகத்தில் அமைச்சர் நிதி

திருச்சி  ஏப் 23

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் இலவச உணவு -  துவக்கி வைத்து அமைச்சர் 1.50 லட்சம் நிதி வழங்கினார்.

 தமிழகம் முழுவதும் கொரனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3ம் தேதி அரசு அறிவித்துள்ளது. இந்நாட்களில் ஏழை எளிய மக்கள் உணவுக்கு அவதிப்படும் நிலையை கருத்தில் கொண்டு அம்மா  உணவகத்தில் இலவச உணவு வழங்கும்  திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சி கிழக்கு சட்டமன்றத்திற்குட்பட்ட 7அம்மா உணவகத்திலும் காலை, மதியம் மற்றும் இரவு, மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அதற்காக ரூபாய் 1.50லட்சத்துக்கான காசோலையை .
மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணிடத்தில்
வழங்கினார்.
கடந்த 2 நாட்கள் க்கு முன்பு 300 மூட்டை அரிசி அம்மா உணவகத்திற்காக வழங்கியது அடுத்து இன்று இதர மிளக பொருட்கள் மற்றும் காய்கறி வாங்குவதற்கான இத்தொகையை  வழங்கினார்.
பின்னர்  செய்தியாளரிடம் பேசிய அவர் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் வரையில் தினந்தோறும் அனைத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க அறிவுறுத்தி உள்ளேன். இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Apr 21, 2020

திருச்சி ஊரடங்கு உத்தரவை மீறி கன்னி சரம் வைத்து வேட்டையாட முயன்ற போது பிடிபட்டனர்

காகம் மற்றும் எலிகள் தவிர்த்து மற்ற எந்த விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பாம்பு ஆகிய எதை பிடிக்க முயற்சித்தாலும், வேட்டையாடினாலும் குற்றமே என்பதன் அடிப்படையில்

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்,வனவா்கள்,மதன்ராஜ், சரவணன்   மற்றும் வனக்காப்பாளர்கள்
சரவணன், ரவி, ஞானசம்மந்தம்  ஆகியோர்  (வனத்துறையின்) ரோந்து பணி சோதனை மேற்கொண்டபொழுது மணச்சநல்லுா், வலையூர் கிராமத்தை சாா்ந்த 1. ஜெயபாலன் (35), 2.கோபிநாத் (38), மற்றும்
3.கோபிநாதன் (35) ஆகிய மூன்று நபர்கள் விவசாய நிலத்தில் முயல் பிடிக்க கன்னி சரம்(Trap) வைத்திருந்தது தெரிய வந்தது.

 மேற்கண்ட மூவர்களை பிடித்து விசாரணை செய்த போது வேட்டைக்காக கன்னி வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேற்காணும் சம்பவம் தொடா்பாக  வன உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின்  படி வேட்டையாட முயற்சித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் மாவட்ட வன அலுவலர், சுஜாதா IFS  உத்தரவின் படி ரூபாய்.15,000/- இனக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

Apr 20, 2020

மே- 3 வரை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்

*மே- 3 வரை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்*

திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள

 1. *புத்தூர்* ( _அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில்_ ),
 2. *தென்னூர் உழவர் சந்தை* ,
3. *உறையூர் சாலை ரோடு* ,
4. *ஜங்சன் ராக்கின்ஸ் சாலை* ,
5. *கல்கண்டார்கோட்டை* ,
6. *அரியமங்கலம் ஜெகநாதபுரம்*

ஆகிய 6 இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில், வரும் மே 3-தேதி வரை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்குவதற்கான செலவினை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான தொகையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் இன்று வழங்கினார்.