Showing posts with label திருச்சி சபரி நாதன். Show all posts
Showing posts with label திருச்சி சபரி நாதன். Show all posts

Apr 23, 2020

திருச்சி அம்மா உணவகத்தில் அமைச்சர் நிதி

திருச்சி  ஏப் 23

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மா உணவகத்தில் இலவச உணவு -  துவக்கி வைத்து அமைச்சர் 1.50 லட்சம் நிதி வழங்கினார்.

 தமிழகம் முழுவதும் கொரனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை வரும் மே மாதம் 3ம் தேதி அரசு அறிவித்துள்ளது. இந்நாட்களில் ஏழை எளிய மக்கள் உணவுக்கு அவதிப்படும் நிலையை கருத்தில் கொண்டு அம்மா  உணவகத்தில் இலவச உணவு வழங்கும்  திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வெல்லமண்டி நடராஜன்
திருச்சி கிழக்கு சட்டமன்றத்திற்குட்பட்ட 7அம்மா உணவகத்திலும் காலை, மதியம் மற்றும் இரவு, மூன்று வேளைகளும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து அதற்காக ரூபாய் 1.50லட்சத்துக்கான காசோலையை .
மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணிடத்தில்
வழங்கினார்.
கடந்த 2 நாட்கள் க்கு முன்பு 300 மூட்டை அரிசி அம்மா உணவகத்திற்காக வழங்கியது அடுத்து இன்று இதர மிளக பொருட்கள் மற்றும் காய்கறி வாங்குவதற்கான இத்தொகையை  வழங்கினார்.
பின்னர்  செய்தியாளரிடம் பேசிய அவர் ஊரடங்கு உத்தரவை தளர்த்தும் வரையில் தினந்தோறும் அனைத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க அறிவுறுத்தி உள்ளேன். இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Apr 3, 2020

திருச்சி மலிவு விலை காய்கறி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி ஏப் 03

திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.  இதையடுத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று இந்த விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள் 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழக அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடுகள் தோறும் சென்று இந்த காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை மக்கள் வாங்கி பயன் அடைந்து கொள்ள வேண்டும்.  வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். அதனால் கரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


Mar 25, 2020

திருச்சி 24.3.20 மாவட்ட ஆட்சித்தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

 வெளிநாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் மூலம் திருச்சி வந்த பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 483 பேர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது ரத்த பரிசோதனையின் போது கரோனா தாக்குதல் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வீடு திரும்பி விட்டனர். அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். அவர்களை அடையாள படுத்துவதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அவர்களிடம் நெருங்கிப் பழகிய குடும்பத்தினரும் வெளியில் வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதேபோல் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த பலர் பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களுக்கு கார் மூலம் சென்றுள்ளனர். அவர்களின் விபரமும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள நிதி உதவி திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 200 ரேஷன் கார்டுக்கு ஒரு ரேஷன் கடையில் நிதியுதவி அளிக்கப்படும். ரேஷன் கடைக்கு வரும்போது ஒரு மீட்டர் இடைவெளி பின்பற்றவேண்டும். ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் முன்கூட்டியே வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1.32 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இசிஎஸ் மூலம் நிதி உதவி வரவு வைக்கப்படும். டீக்கடை, மளிகை கடை, காய்கறி கடை, பால் கடை போன்ற அத்தியாவசியத் கடைகள் திறந்து இருக்கலாம். ஆனால் கூட்டம் கூட கூடாது. இதேபோல் ஹோட்டல்களும் திறந்திருக்கலாம். அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும். கூட்டம் இல்லாமல் அதுவும் பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
 திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியூரில் இருந்து வந்த பயணிகள் 198 சிறப்பு பேருந்துகள் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சரக்கு வாகனங்கள், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வந்து செல்ல தடை இல்லை. மாட்டுத்தீவனம், உரம் உள்ளிட்டவை கொண்டு வருவதற்கு எவ்வித தடையும் கிடையாது.  வீட்டில் பயன்படுத்தும் வழக்கமான சோப்பை பயன்படுத்தி கை கழுவலாம். மாஸ்க் மற்றும் சானிட்டரி திரவம் அவசியமில்லை. கரொனா தொடர்பான எவ்வித சந்தேகத்துக்கும் 1077 என்ற உதவி எண் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். மருத்துவமனைகளுக்கு வருவோர் ஷேர் ஆட்டோ போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. தேவைப்பட்டால் 108 ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் வரலாம்.
 தமிழகம் முழுவதும் வெளிநாடுகளிலிருந்து வந்த 54 ஆயிரம் பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 75 படுக்கை வசதிகள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 30, மணப்பாறை அரசு மருத்துவமனை 30 படுக்கைகள் உள்ளது. இது தவிர இரண்டு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 30 வீதம் 60 படுக்கைகள் சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது.
 சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவது தவறில்லை. ஆனால் கூட்டமாக கூடி அன்னதானம் வழங்க கூடாது. திருமண மண்டபங்கள் போன்ற இடங்களிலும் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Feb 26, 2020

தமிழக முதல்வர் பேட்டி

திருச்சி

                    
    
திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உடைந்தது. இதற்கு பதிலாக தற்காலிக ஏற்பாடுகள் மூலம் உடைப்பு சரிசெய்யப்பட்டது. சேதமடைந்த தடுப்பணைக்கு பதிலாக அருகில் 387.60 கோடி ரூபாய் செலவில் புதிதாக தடுப்பணை கட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து புதிய தடுப்பணை கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்படி 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தடுப்பணை கட்டுமான பணி நிறைவடைய வேண்டும். இந்நிலையில் இந்த பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்பணை கட்டுமான பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கி கூறினர். இதன் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் வலுவிழந்து உடைந்த பாலத்திற்கு  மாற்றாக புதிய தடுப்பணை அறிவிக்கப்பட்டு 387.60 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் நடைபெற்று வருகிறது. தற்போது 35 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பணிகள் விரைந்து இரவு பகலாக நடைபெற்று வருகிறது. அதனால் திட்டமிட்டபடி பணிகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான பணிகள் காரணமாக விவசாயம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பை தெளிவாக வழங்கியுள்ளார்கள். அதனால் கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவோம் என்று கூறிக்கொண்டே தான் இருக்கவேண்டும். ஆனால் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக உள்ளது. நீர் வழங்காமலும் இருக்க முடியாது. நீரை திருப்பி விடவும் முடியாது. கர்நாடகாவின் இத்தகைய செயல்பாடுக்காக யாரையும் குறை சொல்ல முடியாது. டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த பகுதிகளில் மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதோ அந்தந்த பகுதிகள் அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் மட்டும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே மீத்தேன் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது.  10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும்.  என்பிஆர்.ல் தற்போது மூன்று கேள்விகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்று மொழி, இரண்டாவதாக பெற்றோர் பிறப்பிடம், மூன்றாவதாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளது.  நாங்கள் மக்களை செல்கிறோம்.   கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள்  ஆகியோர்தான் தேர்தலை நிர்ணயம் செய்வார்கள். ஒரு பொருளுக்கு ஏஜென்சி அளிப்பது போல் உள்ளது.  ராஜ்யசபா தேர்தலில் யார்? யார்? போட்டியிடுவது குறித்து தலைமை கழகம் முடிவு செய்யும். சீட்டு கேட்பதற்கு அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.  குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது அரசின் பரிசீலனையில் உள்ளது. காவிரியாற்றில் எந்த இடத்தில் மணல் அள்ளலாம் என்பதை கமிட்டிதான் முடிவு செய்கிறது. அந்தந்த பகுதிகளில் மட்டுமே மணல் எடுக்கப்படுகிறது. எனினும் தற்போது அனைத்து இடங்களிலும் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது. எம் சாண்ட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் செய்த அரசு பணிகளுக்கு மட்டுமே தற்போது மணல் பயன்படுத்தப்படுகிறது என்றார்.

Jan 19, 2020

திருச்சி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சி தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி உலக சுகாதார நிறுவனம் மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்க உள்ளது கடந்த பதிமூன்று 1 2011 முதல் இன்று வரை இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லை இதைத் தொடர்ந்து நிலையான நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கும் போலியோ நோயை அறவே ஒழிப்பதற்கு இந்த முறையை மிகவும் சிரத்தையோடு பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1279 மையங்களிலும் திருச்சி மாநகராட்சியில் 244 மையங்களிலும் துறையூர் நகராட்சியில் 20 மையங்களிலும் மணப்பாறை நகராட்சி 23 மையங்களிலும் மொத்தம் ஆயிரத்து 563 மையங்களில் சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார மையங்கள் அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நகரங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது ஸ்ரீரங்கம் குணசீலம் சமயபுரம் வயலூர் ஆகிய கோயில்கள் மசூதிகள் ஆலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் விமான நிலையம் முக்கொம்பு போன்ற சுற்றுலாத் தலங்க ஆகிய அனைத்து இடங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 55 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வர இயலாத இடங்களில் 69 நடமாடும் குழுக்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்ய உள்ளது செய்துள்ளது ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து திருச்சியில் இன்று செல்லும் மற்றும் திருச்சி வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணம் செய்யும் ஐந்து வயதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிராமப்புறங்களில் 16 74 69 குழந்தைகளுக்கும் நகர்புறங்களில் 97 47 4 குழந்தைகளுக்கும் இடம்பெயர்ந்து குடியிருப்போர் மற்றும் நாடோடிகளின் குழந்தைகள் 527 பெயர்களுக்கும் ஆக மொத்தம் 265470  குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட திட்டமிட்டுள்ளது இம்முகாமில் 6650 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்

Dec 23, 2019

திருச்சி மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவி அதிமுக வேட்பாளர் கார்த்தி வாக்கு சேகரித்தார்




திருச்சி மணிகண்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வார்டு எண் 6 இல் போட்டியிடும் கார்த்திக்  அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்

அவர் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஏராளமான கழக தொண்டர்கள் மகளிர் அணி கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Dec 22, 2019

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜார்ஜ் தீவிரப் பிரச்சாரம்

திருச்சி புங்கனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு  அதிமுக சார்பில் ஜார்ஜ் என்பவர் போட்டியிடுகிறார் அவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது இன்று பகுதிகளான சுற்றுவட்டார பகுதிகளில் ஜார்ஜ் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்



அப்போது அவர் கூறுகையில் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கவே அம்மா ஆட்சியில் நான் இப்போது போட்டியிடுகிறேன் நான் ஜெயிப்பேன் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு செய்திடுவேன் என்றும் நான் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்

Dec 17, 2019

திருச்சி உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


மணச்சநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பாக மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி கணவர் முருகன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பல்வேறு பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர் மேலும் அதிமுக கூட்டணி கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்


இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.    வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.
24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Apr 27, 2018

திருச்சி பள்ளி கல்வி துறை அமைச்சர் பேட்டி

திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட தலைவர்கள் கருத்தரங்கம், மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா, உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ,பரிசளிப்பு விழா திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.


பள்ளி கல்வித்துறை அமைச்சர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாரளுமன்ற உறுப்பினர் பா.குமார்
கலெக்டர் ராஜாமணி, மாவட்ட நூலக அதிகாரி சிவக்குமார், மாணவரணி கார்த்திகேயன், அருள் ஜோதி, ஏர்போர்ட் விஜி,பொன்.செல்வராஜ்,தர்கா காஜா, திருப்புகழ், அக்தர் பெருமாள், மகாலட்சுமி மலையப்பன்
பலர் கலந்து ெகாண்டனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்கொண்டு வருகிறது. அதற்கான கடிதத்தை சிபிஎஸ்சி-க்கு கடிதம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது விடுமுறை காலங்களில்  சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது புகார்கள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.