Showing posts with label திருச்சி சபரிநாதன். Show all posts
Showing posts with label திருச்சி சபரிநாதன். Show all posts

May 6, 2020

திருச்சி வனச்சரக அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது

திருச்சி வலைவீசி முயல் பிடிக்க  முயற்சித்தவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் தலைமறைவு

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்  வனவா் சரவணன்   மற்றும் 


வனக்காப்பாளா் கருப்பையா, ஜான் ஜோசப் வனக்காவலா் சுகாஷினி ஆகியோர் திருச்சி வனச்சரகம், கண்ணனூா் பகுதி பகளவாடி காப்புகாட்டில்,  வேட்டையாடிய காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி 27/2020 மற்றும் 
சங்கா்(Driver-தலைமறைவு)25/2020 ஆகிய இருவர்  வலை வைத்து முயல் பிடித்த குற்றத்திற்காக  கைது செய்து  
வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 2(1), 2(16)(a)( b), 2(35), 2(37), 9, 39(1)(d), 50, 51(1)  & IPC 188, 269, 270, 271  
r/w 3 of Epidemic Act 1897 & 134, 135 TN Public Health Act 1939 r/w 51(d) Disaster Management Act 2002 படி
துறையூா் நீதிமன்ற நீதிபதி அவா்கள் உத்தரவுபடி 15 நாட்கள் சிறைகாவலில் அடைக்கப்பட்டனா். Hero Splendor இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

Dec 21, 2019

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அதிமுக பிரச்சாரம்

திருச்சி



திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக - அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பில் பேச்சு ...


திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 4077 பதவிகளில் 626 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 3451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைப்பு செயலாளர் பரஞ்சோதி, அதிமுக நிர்வாகிகள், தோழமை கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 18 வது வார்டு தாமரை சிவசக்திவேல் 1 முதல் 6 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து, அதவத்தூர், அல்லித்துறை, சோமரசன்பேட்டை, இனியானூர், நாச்சிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் வளர்மதி ...

மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக -

அதிமுக தலைமையிலான தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் வந்தடைய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

தமிழகம் மின் மிகை மாநிலம் போல திருச்சியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் மிகை மாவட்டமாக திருச்சி உள்ளது என அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பின் போது பேசினார்.

அதிமுக கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர்கள், அமைச்சர் வளர்மதிக்கு அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியின் போது அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார், ஜவஹர் சகாதேவன்பாண்டி ,முத்துக்கருப்பன், மற்றும் கழக நிர்வாகிகள் பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்


Mar 28, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தர்காவில் வழிபாடு

நத்தஹர்வலி தர்காவில் வழிபட்ட அமமுக வேட்பாளர்

திருச்சி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர் வலி தர்காவில் நத்தர் அவர்களின் கலீபா அப்துர் ரகுமான் சித்தீகி அவர்களும், வளர்ப்பு மகள்  ஹலீமா என்ற மாமா ஜிக்னியும், நத்ஹர் அவர்களின் கால்மாட்டிலும், ஷம்ஸ் கோயான் அமைச்சர் கீழ்புறத்தில் மற்றொரு அமைச்சரான ஷம்ஸ்பீரான் அடக்கம் பெற்றுள்ள இடத்தில் வழிபாடு செய்தார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் அடங்கப் பெற்று உள்ள இடத்திற்கு வெளியே நின்று வழிபட்டு மயிலிறகால் மதிக்கப்பட்டது



மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பச்சை நிற போர்வையை போற்றி மலர்கள் தூவி வழிபட்டார்.



அவைத் தலைவர் ராமலிங்கம் இணைச் செயலர் சிறுபான்மை பிரிவு செயலர் நத்தர்ஷா பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர் உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் மகளிரணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட மாநகர பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

Mar 23, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் விஜய் ரசிகர் மன்ற தலைவரிடம் ஆதரவு கூறினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்


 திருச்சி மாவட்டம் விஜய் ரசிகர் மன்றத் தலைவர் ராஜா மற்றும் நிர்வாகிகளிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்புச் செயலாளர் மனோகரன் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் அரியமங்கலம் பகுதி செயலாளர் சரவணன் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்  உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி இணைச் செயலர் சேட் லதா  மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார்  உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Mar 22, 2019

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பேராயர் சந்திரசேகரன் அவர்களை சந்தித்தார்



அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் திருச்சி தொகுதிக்கு உட்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து வருகின்றார் சிஎஸ்ஐ திருச்சபை பேராயர் சந்திரசேகரன் அவர்களிடம் சந்தித்து ஆசி பெற்றார்


 திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் வழக்கறிஞர் சரவணன் மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உட்பட பல நிர்வாகிகள் ஆதரவு கோரினார்கள்.

Sep 18, 2018

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்காட்சியை திறந்து வைத்தார்

திருச்சி
18.09.2018
 
 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில்  மாநகர மக்களின் பேராதரவோடு 44 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 45 வது வருடத்தில் அடிஎடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவிப்பதோடு வழமைபோல் இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 18.09.2018  முதல் 20.10.2018 வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி  பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியை திரு.கு.இராசாமணி,இ.ஆ.ப.,மாவட்டஆட்சித்தலைவர்,    திருச்சிராப்பபள்ளி,அவர்கள் 18.09.2018 செவ்வாய் கிழமை அன்று மாலை 6.00  மணியளவில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்கள்.
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொம்மை செட்டுகள்:

                 அஷ்ட பைரவர் செட், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள் செட், வேத மூர்த்திகள் செட், கார்த்திகை தீபம், கள்ளழகர் செட், கல்யாண ஊர்வலம்,  கிரிக்கெட், சஞ்சீவி செட், பெருமாள் ஊர்வலம் செட், நவ கண்ணிகள் செட், பானைகிருஷ்ணன் செட், தசாவதாரம் செட், அஷ்டலக்ஷ்மி செட், கயிலாய மலைசெட், கார்த்திகை பெண்கள் செட், ஸ்ரீரங்கம் செட், அன்னபூரணி செட்,          விநாயகர் செட், மஹாலக்ஷ்மி வரம் செட், மாயா பஜார் செட்,                             சீனிவாச கல்யாணம் செட், மீனாட்சி கல்யாணம் செட், மும்மூர்த்தி செட், ராமர் பட்டாபிஷேகம் செட், தாத்தா பாட்டி செட், பெருமாள் தாயார் செட்,
    ராமர் பாலம் செட், சுக்ரீவர் பட்டாபிஷேகம் செட், கனகதாரா செட், முருகர் உபதேசம் செட், கஜேந்திர மோட்ஷம் செட், மாங்கனி செட், கீதா உபதேசம் செட், ஜோதிர்லிங்கம் செட், பரத நாட்டியம் செட், அசோகவனம் செட், பீஷ்மர் அம்பு படுக்கை செட், கனையாழி செட், ஆழ்வார் செட், கோபியர் டான்ஸ் செட், விவசாய செட், தட்டாங்கி செட், ஜடாயு மோட்சம் செட், ராமர் செட், அகலியா சாப விமோட்சம் செட் முதலான பொம்மைகள்  கல்கத்தா, மணிபூர், இராஜஸ்தான், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.
              இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
     என பூம்புகார் சார்பாக மேலாளர் தெரிவித்தார்

Mar 29, 2018

திருச்சி போக்குவரத்து துறையினக்கு அமைச்சசர்கள் பாராட்டு

திருச்சி        29.3.18


இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் ( கும்பகோணம்) இணைந்து நடத்தும் டீசல் செயல் திறனில் சாதனை புரிந்த பணியாளர்களுக்கு பரிசு வழங்குதல்

டீசல் செயல் திறன் அதிகரிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. உதிரி பாகங்கள் தேய்மானம் குறைவதோடு டயர் உழைப்புத் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகம் டயர் உழைப்புத் திறனில் அதிகபட்சமாக 2.51 என்ற அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முதன்மை இடத்தில் உள்ளது.

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட 6 மண்டலங்களிலும் இருந்து 3 4 5 டிரைவர்கள், 59 கண்டக்டர்கள், 36 தொழில் நுட்பப் பணியாளர்கள், 18 டீசல் பொறுப்பாள்கள்,6 ஓட்டுநர் கண்காணிப்பாளர்கள், 18 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள், 12 கிளை மேலாளர்கள் 6 உதவி மேலாளர்கள் என 500 பேருக்கு சாதனையாளர் பரிசுகளை திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே உள்ள போக்குவரத்து கழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

Mar 17, 2018

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மரம் நடுவிழா


திருச்சி ஸ்ரீீீரங்க ம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணத்துப் பூச்சி பூங்்கா்காவில் மார்க்கன்று நடும்்் விழா
நடைபெற்றறது அமைச்சர்கள் வெல்்ல்ல மண்டி நடராாஜன் அமைச்சர் வளர்மதி பாாரளுமன்ற்ற உறுப்பினர் குமார் மாவட்டட ஆட்சித் தலைவர் இராாாசா மணி மரக்கன்றுகள் வைத்தனர்

இந்நிழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம் சீரங்கம் .பகுதி செயலாளர் டைமன் திருப்பதி, சகாாாாதேவன் பாண்டி
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.