Showing posts with label Trichy reporter sabarinathan. Show all posts
Showing posts with label Trichy reporter sabarinathan. Show all posts

Sep 22, 2024

முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து

திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் தனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வரும் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளருமான  எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற போது எடுத்த படம்  அருகில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உடன் இருந்தார்



Feb 13, 2022

திருச்சி 15வது வார்டு அதிமுக வேட்பாளர் முக கவசம் கொடுத்து பிரச்சாரம்

 


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சி 15 வது வார்டில் அதிமுக சார்பில் T. ரேணுகா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று தனது 15வது வார்டுக்கு உட்பட்ட சஞ்சீவி நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


வாக்கு சேகரிப்பின் போது ரேணுகா பொதுமக்களிடம் பேசுகையில்...

இப்பகுதி மக்களின் எந்த அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வில்லை. நான் வெற்றி பெற்றவுடன் இப்பகுதியின் அடிப்படை பிரச்சினைகளான பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைப்பது உள்ளிட்டவற்றை விரைந்து செயல் படுத்துவேன். மக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்கள் பிரச்னைகளுக்காக திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் என் குரல் ஒலிக்கும். நமது வார்டை முன் மாதிரியான வார்டாக மாற்றுவேன். மேலும் பல திட்டங்களை இந்த வார்டு மக்களுக்கு பெற்று தர வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வாக்கு சேகரிப்பின் போது 15வது வார்டு பிரதிநிதி காலனி தங்கவேல், வட்டச்செயலாளர் பொன் அகிலாண்டம், துணை செயலாளர் DG.தர்மலிங்கம், அவைத்தலைவர் ஊறுகாய் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ், இணைச் செயலாளர் ரகுபதி, பொருளாளர் குணசேகரன், துணைச் செயலாளர் மீனா சுப்பிரமணி, மற்றும் பிரதிநிதிகள் சகாயராஜ், போட்டோ கிருஷ்ணன், பெட்டிகடை சங்கர், N.பாண்டுரங்கன், G.பாலமுருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Feb 12, 2022

அதிமுக சார்பில் 56 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு ராஜலட்சுமி தீவிர பிரச்சாரம்.


 56 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு  ராஜலட்சுமி தீவிர பிரச்சாரம்.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 56வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு V. ராஜலட்சுமி போட்டியிடுகிறார். 

அந்த வகையில் அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் அவருக்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

முன்னாள் கூட்டுறவு தலைவர் பத்மநாதன், , வட்டகளக செயலாளர் முத்துக்குமார், , வட்ட பொருளாளர் ராஜகோபால்,   பகுதி பிரதி நிதி தினேஷ்,ராஜகோபால், முருகேசன், ஆறுமுகம், அழகுராணி, மகளிரணி மாதவி, வட்ட பொருளாளர் டைல்ஸ்,முருகன் ,பூமினதான் வட்ட துணை செயயலாளர்

Feb 11, 2022

திருச்சி அனல் பறக்கும் பிரச்சாரத்தில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு அதிமுக வேட்பாளர் நிர்மலா மேரி

 


அனல் பறக்கும் பிரச்சாரத்தில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு அதிமுக வேட்பாளர் நிர்மலா மேரி ஆபிரகாம்

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டில் அதிமுக சார்பில் நிர்மலா மேரி ஆபிரகாம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் நிர்மலா மேரி. 

அந்தவகையில் இன்று தனது 46 வது வார்டுக்குட்பட்ட நேரு தெரு, சாலமன் தெரு, கருதசாமி நகர், எம்ஜிஆர் நகர், ஜே ஜே நகர், உள்ளிட்ட பகுதிகளுக்கு வீடு வீடாக சென்று தனது தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

வாக்கு சேகரிப்பின் போது பொன்மலை பகுதி அவைத்தலைவர் சாமிகண்ணு, தெற்கு மாவட்ட அம்மா பேரவை பொறுப்பாளர் TT. கிருஷ்ணன், பகுதி துணை செயலாளர் கொட்டப்பட்டு பரமசிவம், 46 வது வட்ட செயலாளர் MRV. நாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்ன குமார், அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, பிரதிநிதிகள் அந்தோணி ராஜ், லூர்து மேரி என்கிற பத்மா இந்திரா, வாசுகி, உஷா உட்பட வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Feb 10, 2022

திருச்சி மாநகராட்சி 6 வது வார்டில் போட்டியிடும் அதிமுக சார்பில் ஜெ.கவிதா பிரச்சாரம்


 பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 6 வது வார்டில் அதிமுக சார்பில் ஜெ.கவிதா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். 


இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த கவிதா, தொடர்ந்து தனது பகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 

அந்த வகையில் இன்று 6வது வார்டுக்குட்பட்ட  தாத்தாச்சாரியார் கார்டன், மாம்பழச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

வாக்கு சேகரிப்பின் போது வட்டச் செயலாளர்கள் கொளஞ்சி மற்றும் தமிழரசன், கண்ணன், சாமிகண்ணு, கரிகாலன், பவர் சிங், செந்தில், கஸ்தூரி உட்பட வட்டக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Feb 9, 2022

அதிமுக வேட்பாளர் கரும்புச்சாறு கொடுத்து பிரச்சாரம்

 


வார்டு பகுதி மக்களுக்கு கரும்புச் சாறு  எடுத்து கண்ணாடி குடுவையில் கொடுத்து பிரச்சாரம் செய்த 53 வது வார்டு அதிமுக வேட்பாளர் கற்பகவள்ளி


 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 53 வது வார்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா அவர்களின் மனைவி கற்பகவள்ளி போட்டியிடுகிறார். 


இந்நிலையில் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த கற்பகவள்ளி இன்று 53வது வார்டுக்குட்பட்ட வில்லியம்ஸ் ரோடு, புது தெரு, முடுக்கு தெரு, சோனா மீனா சாலை ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள கரும்புச்சாறு கடைக்கு சென்று அங்கு வரும் வார்டு மக்களுக்கு கரும்பு சாறு  கொடுத்து  வித்தியாசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


வாக்கு சேகரிப்பின் போது எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா, வட்ட செயலாளர் ஒத்தகடை மஹேந்திரன், எஸ்.எம்.டி.மணிகண்டன், தாரணி, நாகலட்சுமி, லஜபதி, ராஜகணபதி, யாசர் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Feb 8, 2022

திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் பிரியா சிவக்குமார் பிரச்சாரம்


 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 7 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் பிரியா சிவக்குமார் போட்டியிடுகிறார்.

 இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 7 வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கீதாபுரம், மங்கம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

இந்நிகழ்வின்போது பூக்கடை ரங்கராஜ் உள்ளிட்ட வட்டக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ரேவதி பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை  சின்னத்தில் ரேவதி போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 03 வது வார்டுக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வீடுகளுக்கு சென்று  துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக செயலாளர் கே.செல்வம், பி.சுப்பிரமணி, அமுல்தாஸ், ராஜம்மாள், ராஜா, சவேரியார், கலைவாணன், கிருஷ்ணவேணி, லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

திருச்சி மாநகராட்சி 05 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பு

 திருச்சி மாநகராட்சி 05 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திருச்சி 05 வது  வார்டில் அதிமுக சார்பில் கே.எஸ்.ராஜு  போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ராஜு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி 05 வது வார்டுக்குட்பட்ட


மேல கொண்டையம் பேட்டை, எடத்தெரு, அக்ரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Feb 5, 2022

மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக் தீவிர பிரச்சாரம்

 



மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் எம்.எஸ்.நஸிமா ஃ பாரிக்      ஐம்பதாவது வார்டுக்குட்பட்ட  ஆலம் தெரு தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அவர் கூறுகையில் நான் பொது மக்கள் சேவையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறேன்

 பொதுமக்களுக்கு எந்த நேரத்திலும் நான் சேவை செய்யக் கடமைப் பட்டுள்ளேன் அரசு சலுகைகள் ஆன அரசு இடமிருந்து பொது மக்களுக்கு என்னென்ன சலுகைகள் தேவைப்பட்டாலும் தொடர்ச்சியாக  பொது மக்களுக்கு பெற்றுத் தருவேன் 

என்னை பொது மக்கள் தேர்ந்தெடுத்தால் மக்களில்  ஒருவராக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்     இந்நிகழ்வின் போதுவட்ட செயலாளர் .சுந்தர் வடிவேல் .ரபிக். மாவட்ட.மீனவரணி பொருளாளர்சரவணன் . பாலக்கரை பகுதி அவைத் தலைவர் ரவி பகுதி துணைச் செயலாளர் முத்துக்குமார் நவ்ரோஜ் அபுதாகிர் விமல் ஆகியோர் உடன் இருந்தனர்

Feb 1, 2022

திருச்சி மாநகர் 14 அதிமுக வேட்பாளர் அரவிந்தன் வாக்கு சேகரிப்பு

 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்*



*மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும்   கழக இணை* *ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் எடப்பாடிK பழனிச்சாமி அவர்களின் ஆசியுடன்*

*மாண்புமிகு முன்னாள் துணை முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளருமான O.பன்னீர் செல்வம் அவர்களின் ஆசியுடன்*

*திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன்* *வெல்லமண்டி N.நடராஜன் அவர்களின் ஆசியுடன்*

*ஆவின் சேர்மனும் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான மதிப்பிற்குரிய* *அண்ணன் திருC. கார்த்திகேயன்B.E, அவர்களின் ஆசியுடன்*

*14வது வார்டு வேட்பாளராக அறிவித்து இன்று வாக்காள பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள* *திருC.அரவிந்தன் B.com, அவர்கள்*

*இன்று 14வது வட்டகழக நிர்வாகிகளுடன்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்* . 

திருச்சி அதிமுக வேட்பாளர்கள் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை

 


திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்  முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கு.பா கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார் முத்துக்கருப்பன் பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி ஆகியோரை சந்தித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆசி பெற்றனர்.

திருச்சி மாநகரம் 11-வார்டு கவுன்சிலராக அதிமுக சார்பில் வனிதா போட்டி

 திருச்சி

திருச்சி  அதிமுக சார்பில் திருச்சி மாநகரம் 11ஆம் வார்டு கவுன்சிலராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வனிதா கூறுகையில் மக்களுக்கான பணிகளை நான் தொடர்ச்சியாக செய்து வருகிறேன்


தற்போது கவுன்சிலராக போட்டியிடுகிறேன் ஏற்கனவே மக்களுக்கு கவுன்சிலராக நான் பணியாற்றியுள்ளேன் அதேபோன்று கவுன்சிலராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது வார்டு மக்களுக்கு சேவை செய்ய என்றைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார் அரசு சார்பில் கிடைக்கப் பெறும் அனைத்து சலுகைகளையும் எனது வார்டு மக்களுக்கு பெற்றுத் தருவேன் என்று தெரிவித்தார்


Jan 17, 2022

திருச்சி எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு புறநகர் வடக்கு மாவட்டம் சார்பாக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது

 திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


சோமரசம்பேட்டையில் எம்ஜிஆர் சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதுஅதிமுக நிறுவன தலைவரும், மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆர் பிறந்த நாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி, சோமரசம்பேட்டை குழுமணி ஜீயபுரம் பெட்டவாய்த்தலை உள்ளிட்ட பல இடங்களில் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .   முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், கோபி நடராஜன், மணிகண்டம் முத்துக்கருப்பன்  , நகர செயலாளர்கள், முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன், பேரூர் நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், கிளை, வார்டு, பனையபுரம் கர்ணன், நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

Aug 15, 2021

திருச்சி முத்தரசநல்லூர் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் சுதந்திர தின விழா

 


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூர் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின விழா

முத்தரசநல்லூர்  அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

முத்தரசநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா


கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு கௌரவித்து ஓய்வு பெற்ற நபருக்கு மரியாதை அன்பளிப்பு கொடுக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பகுதியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது


மேலும் இந்நிகழ்ச்சியில் முத்தரசநல்லூர் வார்டு உட்பட்ட மெம்பர்  கணேசன் மற்றும் சதீஷ் பஞ்சாயத்து அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்ச்சியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதும் முத்தரசநல்லூர் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுநலன் கருதி மக்கள் சேவையில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதும் முத்தரசநல்லூர் கிராம மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது



May 31, 2020

திருச்சி தொடர்ச்சியாக முதியோருக்கு நலத்திட்ட உதவிகள்

திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள தனது சட்டமன்ற தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு மற்றும் நிதியுதவியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கி வருகிறார்.

                  

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகளால், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது

                
அதன் ஒரு பகுதியாக

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர்

வெல்லமண்டி நடராஜன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு இலவச உணவு வழங்கினார்

கங்காரு கருணை இல்லத்தினை பார்வையிட்டார்.உடன் சாய் கோகுலம் தொண்டு நிறுவனம் சார்பாக 300 பொட்டலங்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.

 அமைச்சரிடம் கருணை இல்ல பயனாளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை *மருத்துவ வசதிகள்,*

கட்டணமின்றி தகனம் செய்ய மின்மயான அனுமதி மற்றும்

திருச்சிராப்பள்ளி சாலையோரங்களில் இருந்து மீட்கப்படும் நபர்கள் (1000 பேர் வரை தங்க வைக்கும்)


பராமரிப்பு கட்டிடம் கட்டுவதற்கான அரசுக்கு சொந்தமான நிலம் வேண்டும் என்ற கோரிக்கை மனு அமைச்சரிடம் வழங்கப்பட்டது

 முதியோர் இல்ல பயனாளிகள் சார்பாக கொடுக்கப்பட்டது.கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் உறுதி அளித்துள்ளார்


இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி கழக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

May 23, 2020

திருச்சி ரம்ஜானை முன்னிட்டு முஸ்லீம்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இலவச மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார்

திருச்சி 

மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
                   

சமூக இடை வெளியில் நலத்திட்ட உதவிகள் - ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்ததிலிருந்து தனது தொகுதி மக்கள் கஷ்டப்படாமல் இருக்க திருச்சியில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான  அமைச்சர்வெல்லமண்டி நடராஜன் மனிதநேயத்துடன் தனது தொகுதிவார்டு வாரியாக இலவசமாக சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கி வருகிறார்

                   
   

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை அடுத்து தமிழகத்தில்  அமைச்சர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் நலத்திட்டங்களை வழங்கி  வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக  திருச்சி கிழக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் வரும் பொது மக்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கடந்த 50 நாட்களுக்கு மேலாக  வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் பொதுமக்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் வகையில் தொடர்ந்து   தொகுதிக்கு உட்பட்ட வார்டு வாரியாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். 

தற்போது முஸ்லிம் சமுதாய மக்களுக்கு ரம்ஜான் பண்டிகை வருகிறது அதற்காக ஏழை எளிய முஸ்லிம் சமுதாய மக்களுக்கு இலவச பொருட்கள்

திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலகம் இருந்த இடத்தில் மக்களை வரிசையாக சமூக இடைவெளி விட்டு நாற்காலியில் அமரச்செய்து ஒருவர் பின் ஒருவராக சமூக இடைவெளி பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

 நிவாரண தொகுப்பு பைகளில் அரிசி, காய்கறி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


 இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் ஜவஹர்லால் நேரு, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன்,வெல்லமண்டி சண்முகம், மகளிர் அணியைச் சேர்ந்த ஜாக்லின், மற்றும் சந்திரு, கணேஷ் உட்பட  சார்ந்த அதிமுகவை சேர்ந்த  கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பகுதி தொகுதி செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை

திருச்சி மே 23

திருச்சியில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
பிறந்த நாளை முன்னிட்டு அரசின் சார்பில் அவரது திருவுருவச்சிலைக்கு
மாவட்ட ஆட்சியர்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று காலை 8.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வருவாய் துறை கோட்டாச்சியர் விஸ்வநாதன் மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொது மக்களின் நலன் கருதியும கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே
144தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள் மற்றும் எந்த கட்சியினரும் அமைப்பும் 
கலந்து கொள்ள வேண்டாம் எனவும்,
மேலும், திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திகிறார்..

திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி நிகழ்ச்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்

*திருச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் Covid-19 சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்*


கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசு  கடந்த மார்ச் முதல் தற்போது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும் சாமானியர்கள் நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்.

இன்று திருச்சி மாவட்ட மத்திய வங்கியின் Covid-19 சிறப்பு கடனாக  நகைக்கடன் மிகக் குறைந்த வட்டியில் 58 பைசாவில் சுய உதவி குழுக்களின் மூலம் சிறப்பு கடன் வழங்கப்படுகிறது.

நகை கடன் திட்டத்தின் கீழ் கிராமிற்கு 3,000 ரூபாய் வீதம் 7% குறைந்த வட்டி வீதத்தில் 6 மாத காலத்திற்கு நபர் ஒருவருக்கு  ஒரு 5,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 2660 குழுக்களும் சங்க அளவில் 1190 குழுக்களும் உள்ளது.

இதில் Covid-19 சிறப்பு கடன் உதவிக்கு தகுதியுள்ள 75 குழுக்களுக்கு ரூ62.50 லட்சம் கடன்  வழங்கப்பட்டது.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன் துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

May 22, 2020

திருச்சி பேரரசர் முத்தரையர் பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 தேதி
அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
செய்யப்படுகிறது.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள்
விழா அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு அறிவிப்பு

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள் விழா
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும்  தெரிவித்ததாவது
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 144 – தடை உத்தரவு அமலில்
உள்ளதால் பொது மக்களின் நலன் கருதியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனவே வருகின்ற (23.5.2020) அன்று மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு
அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை
செலுத்துவார்கள். 144 – தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள்
கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறதுஇவ்வாறு மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.